India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கு ஆகும் மொத்தச் செலவு ₹1.35 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சி செய்யும் செலவும் தேர்தல் செலவுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி “The Centre for Media Studies” என்ற நிறுவனம் தேர்தல் செலவு குறித்து நடத்திய ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. 2019இல் தேர்தல் செலவு ₹66 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
நீட் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. MBBS, BDS போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுதும் மையம் தொடர்பான விவரங்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவிட்டு விவரங்களை அறியலாம்.
ஈராக்கில் 11 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நசிரியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு நீதித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் இத்தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2017இல் ஈராக் படைகளால் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
உலக மலேரியா நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் ஆண்டுக்கு சுமார் 7 இலட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். குளிர் காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும். மலேரியா நோயில் இருந்து பாதுகாக்கக் கொசு வலையைப் பயன்படுத்தலாம். அதிகாலை நேரங்களில் நீளமான ஆடைகளை அணியலாம். வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
‘கில்லி’ திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், செமி ஃபைனலில் தோற்ற அணி எப்படி ஃபைனலுக்கு வந்தது என்ற கேள்வி எழுவதோடு, அவ்வப்போது ட்ரோல் செய்யப்பட்டும் வந்தது. இது குறித்துச் சமீபத்தில் விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் தரணி, பெஸ்ட் ஆஃப் 3 என விளக்கம் அளித்துள்ளார். செமி ஃபைனலில் வெற்றி பெற்ற கோப்பையை வேலுவின் தங்கை அவரது தந்தையிடம் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு, அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞானவேல் ராஜா வீட்டில் நகைகள் திருடுபோனது தொடர்பாக போலீசார் பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்த அவர், அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்., தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காததால் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை விமர்சிப்பதாகக் கூறிய அவர், பிரதமரின் பேச்சு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை என்றார். மேலும், பெரு நிறுவனங்களின் வரியைக் குறைக்கும் மோடி அரசுக்கு ஏழைகள் மீது எந்த அக்கறையும் இல்லை என விமர்சித்துள்ளார்
யூத எதிர்ப்பு கும்பலைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்துப் பேசிய அவர், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் அரங்கேற்றப்படும் யூத எதிர்ப்பானது, 1930களில் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இதை உலகம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்காது எனக் கூறினார்.
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2016இல் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இதில் அனைத்துத் தரப்புச் சாட்சிகளிடமும் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நாளை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.