News April 25, 2024

ஆடி கார்கள் விலை 2% உயருகிறது

image

ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவினம் அதிகரிப்பு காரணமாக கார்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆடி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

News April 25, 2024

IPL: பெங்களூரு அணி பேட்டிங்

image

ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் SRH, RCB அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RCB கேப்டன் டு ப்ளஸி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்றுள்ள SRH புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள RCB கடைசி இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 25, 2024

பிரதமர் திட்டத்தில் லேப்டாப் என்பது வதந்தி

image

பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் போலியானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) விளக்கமளித்துள்ளது. PMYP திட்டத்தில் இலவச லேப்டாப் பெற, https://laptop.2eqqg.site/?free=39 இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள AICTE, இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 25, 2024

செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்

image

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ED வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அவர், ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறிய ED, செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஜூன் 21க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

News April 25, 2024

பர்கரால் பறிபோன உயிர்…

image

பாகிஸ்தானின் கராச்சியில் காவலரின் மகனான டேனியல் என்பவர் தனது காதலி, அவரது நண்பரும் நீதிபதியின் மகனுமான அலி கீரியோ மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, டேனியல் தனக்கும், காதலிக்கும் சேர்த்து 2 பர்கரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அலி கீரியோ அதை எடுத்துச் சாப்பிட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில், டேனியல் துப்பாக்கியால் சுட்டதில் அலி கீரியோ படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

News April 25, 2024

சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

image

சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்.26, 27இல் நாகை, வேளாங்கண்ணி, ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

News April 25, 2024

தமிழ்நாடு அரசின் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 13 வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க சென்னையில் ₹500, பிற மாவட்ட தலைநகரங்களுக்கு ₹200 பயிற்சிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 18 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <>https://www.sdat.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

News April 25, 2024

உ.பி.யில் அனல் பறக்கும் தாலி பிரசாரம்

image

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய மனைவிகளின் தாலி குறித்துக் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியினர், அயோத்தியில் சமாஜ்வாதியினரால் உயிரிழந்த ராம பக்தர்களுடைய மனைவிகளின் தாலிக்குப் பதில் சொல்ல வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாலி பற்றிப் பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும் என அகிலேஷ் யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் பேசியிருந்தார்.

News April 25, 2024

தந்தைக்காக வாக்குச் சேகரித்த நடிகை நேஹா

image

பிஹாரின் பாகல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் ஷர்மாவுக்கு ஆதரவாக அவரது மகளும், நடிகையுமான நேஹா ஷர்மா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ரோடு ஷோ நடத்திய அவருக்கு வழி நெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நேஹா ஷர்மா, அன்புக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

News April 25, 2024

பணத்தைச் சேமிக்க ’முதல் வார விதி’

image

சேமிப்பில் ஒழுக்கத்தைக் கொண்டு வர ’முதல் வார விதி’ அவசியமானது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். சம்பளம் வந்ததும் தேவைகள், விருப்பங்கள் போக மீதியை சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த முறையிலான சேமிப்பு பலன் கொடுக்காது எனக் கூறப்படுகிறது. மாறாக சம்பளம் வந்த முதல் வாரத்திற்குள் 20% பணத்தை சேமிப்பதே சிறந்தது.

error: Content is protected !!