News April 25, 2024

பெங்களூரு அணி அபார வெற்றி

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 206/7 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 207 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 171/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

News April 25, 2024

தமிழக அரசு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

image

அரசுப் பேருந்தில் இருக்கை உடைந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், புதிய பேருந்துகளை வாங்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்களின் கார் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுவதாகத் தெரிவித்த அவர், அரசுப் பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்படுவதாகக் கூறினார். மேலும், காலம் கடந்த பேருந்துகளை மாற்றவும், உதிரிப் பாகங்கள் வாங்கப் போதிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொண்டார்.

News April 25, 2024

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் புதிய வீரர்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதின் நைப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 25, 2024

இந்த ராசியினரைத் தேடி வந்து பணம் கொட்டப் போகிறது

image

மேஷ ராசியில் புதன் மற்றும் குரு பகவான் சஞ்சரித்துள்ளதால் கஜலட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் மேஷம், கடகம், தனுசு, கும்ப ராசியினருக்கு பணம் கொட்டோ கொட்டென கொட்டப் போகிறது. பூர்விக சொத்துக்களில் நிலவி வந்த சிக்கல் நீங்கும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு. திருமண யோகம் என பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News April 25, 2024

கடும் சரிவைச் சந்தித்த டெக் மகேந்திரா

image

முன்னணி ஐடி நிறுவனமான டெக் மகேந்திரா கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நிகர லாபம் 40.9% சரிந்து ரூ.661 கோடியாகக் குறைந்துள்ளது. அதே போல, வருவாய் 6.2% சரிந்து ரூ.12,871 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.12,926 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ரூ.28 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

தடுமாறும் ஹைதராபாத் அணி

image

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய SRH அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இன்று சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போது வரை SRH 12 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. SRH வெற்றிபெற இன்னும் 48 பந்துகளில் 88 ரன்கள் தேவை. RCB சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

News April 25, 2024

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு

image

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

News April 25, 2024

ஊட்டச்சத்து பானங்களால் என்ன பிரச்னை?

image

போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை ‘ஆரோக்கிய பானங்கள்’ பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவை ஆரோக்கிய பானங்களே இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். இப்படியான பானங்களில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை நமது ரத்தத்தில் சட்டெனக் கலப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், நாளடைவில் இவை சர்க்கரை வியாதி, உடல் பருமன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

News April 25, 2024

100 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி

image

நடப்பு ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது SRH. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா, க்ளாஸன் இருவரும் தலா 26 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். டிராவிஸ் ஹெட் 18 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் SRH அணிக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளதால், 200 சிக்ஸர்கள் அடிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு SRH அதிகபட்சமாக 2022 சீசனில் 97 சிக்ஸர்கள் அடித்திருந்தது.

News April 25, 2024

செயற்கை இனிப்பூட்டிகளில் இருக்கும் அபாயம்

image

அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் போன்ற செயற்கை இனிப்பூட்டி கலந்த உணவுகளைச் சாப்பிட வேண்டாம் என உலகச் சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவை டைப் 2 நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் ஆகிய அபாயத்தை அதிகரிக்கின்றன. உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. அண்மையில் பஞ்சாபில் அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டி சேர்க்கப்பட்ட கேக்கைத் தின்ற சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!