News April 26, 2024

சுப காரியங்கள் கைகூட சுதர்சனரை வணங்குங்கள்!

image

‘ஹரியின் சுதர்சனத்தை உபாசிப்பவர்கள் ஆனந்த வாழ்வை வாழ்வார்கள்’ என்கிறது பாகவதம்.
மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர். எனவே சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுதர்சனருக்கு நெய் தீபமேற்றி, துளசி இலை மாலை அணிவித்து, பன்னிரு முறை அவரை வலம் வந்து, ‘ஜய ஜய ஶ்ரீசுதர்ஸனா’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்கினால், சுப காரியங்கள் கைகூடும் என்பது ஐதிகம்.

News April 26, 2024

முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன்

image

முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டுமென்று நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும், பிறகு தேவை ஏற்பட்டால் சம்மன் அனுப்பலாமென கூறி, உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தனர்.

News April 26, 2024

ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு

image

SRH-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத ஹைதராபாத் அணி, சென்னை, மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை அவர்களுடைய மைதானத்திலேயே வீழ்த்தியது. ஹைதராபாத்தைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்கள் சொந்த மண்ணில் தோல்வி அடைந்துள்ள நிலையில், RCB அணியுடனான நேற்றைய போட்டியில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

News April 26, 2024

2ஆம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம் நடக்கிறது?

image

மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து, இன்று 2ஆம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மகாராஷ்டிரா 8, உ.பி 8, ம.பி 6, பிஹார் 5, அசாம் 5, மேற்குவங்கம் 3, சத்தீஷ்கர் 3, காஷ்மீர் 1, மணிப்பூர் 1, திரிபுரா 1 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

News April 26, 2024

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பஞ்சாப்?

image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி 21 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வென்றுள்ளன.

News April 26, 2024

2ஆம் கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளர் இவர் தான்!

image

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாப் 5 பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா ரூ.622 கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, டி.கே.சுரேஷ் (ரூ.593 கோடி) , ஹேமமாலினி (ரூ.278 கோடி), சஞ்சய் சர்மா (ரூ.232 கோடி), குமாரசாமி (ரூ.217.21 கோடி) இடம்பெற்றுள்ளனர்.

News April 26, 2024

சற்றுநேரத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது

image

மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வாக்குச்சாவடி மையங்களில் தயார் நிலையில் உள்ளன. இதில், ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர், குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

News April 26, 2024

UTS செயலியில் இனி வீட்டில் இருந்து டிக்கெட் எடுக்கலாம்

image

ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், UTS செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் ரயில் நிலையம் தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்திற்குள் பயணத்தை தொடங்க வேண்டும்.

News April 26, 2024

ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி

image

ஜி7நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி சுதந்திர தினத்திற்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார். இத்தாலியில் வரும் ஜூன் 13 முதல் 15ஆம் தேதி வரை ஜி7 மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பே, அதில் பிரதமர் பங்கேற்பது குறித்து தெரியவரும்.

News April 26, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 26 | ▶ சித்திரை – 13 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: துவிதியை ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: காலை 10:30 – 12:00 வரை ▶எமகண்டம்: மாலை 03:00 – 04:30 வரை ▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை ▶சந்திராஷ்டமம்: ரேவதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!