News August 18, 2025

உயராத தங்கம் விலை

image

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,200-க்கும், கிராமுக்கு ₹9,275-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News August 18, 2025

அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்

image

தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும் மறுக்கும் ஓடுவதாகவும், அணில் பத்திரமாக மரத்தில் ஏறி இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார்.

News August 18, 2025

தமிழர் என்பதற்காக சி.பி.ஆரை ஏற்க முடியுமா? திமுக

image

துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. தமிழரை பாஜக களமிறக்கியதால், திமுக & அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்குமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழர் என்பதற்காக பாஜக வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியுமா? I.N.D.I.A. கூட்டணித் தலைவர்கள் எடுக்கும் முடிவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

₹400 கோடி வசூலை நெருங்கிய ‘கூலி’!

image

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 4 நாள்களில் படம் இந்தியாவில் ₹194 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகளவில் படம் ₹400 கோடியை குவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையையும் ‘கூலி’ செய்துள்ளது.

News August 18, 2025

அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட OPS, பாஜகவுடன் கூட்டணி அமைத்து லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். திடீர் திருப்பமாக, NDA-வில் இருந்து விலகிய அவரை மீண்டும் இணைக்க மாட்டோம் என்று EPS திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால், அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில், அமமுகவுடன் இணைந்து 2026-ல் அவர் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். இதை <<17438443>>டிடிவியும் <<>> மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

News August 18, 2025

அன்பும், காதலும் பேசும் தம்பதியர் தினம் இன்று!

image

கைப்பிடித்த நாள் முதல் இறுதி வரை கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி தேசிய தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, புன்சிரிப்புடன் விட்டுக் கொடுத்து ரசித்துக் கொண்டே வாழ்வது தான் வாழ்க்கை. இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோள் கொடுத்து, கடமையில் கண்ணாக வாழ்ந்து பாருங்கள், வாழ்க்கை வசந்தமாகும்.

News August 18, 2025

இந்திய அணிக்கு கோச்சாகும் எம்.எஸ்.தோனி?

image

இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்திய Ex வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த ஆர்வம் தோனிக்கு இருப்பதாக தெரியவில்லை என்றும், விளையாடுவதை விட சில சமயங்களில் பயிற்சியாளராக இருப்பது கடினம் எனவும் தெரிவித்தார். தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராகணும் என நினைக்கிறீங்களா?

News August 18, 2025

10 நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி முன்பதிவு

image

அக்.20-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களிலேயே காலியாகியுள்ளன. அக்.18-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.19-க்கு ஆக.20-லும் தொடங்கும்.

News August 18, 2025

51 மாதங்களில் ₹50 ஆயிரம் சேமிப்பு: CM ஸ்டாலின்

image

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்துக்கு அரசு செலவழிப்பது, மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். வெளியில் செல்ல வேண்டுமென்றால் ₹50 தேவை என்பதால் வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இத்திட்டம் தகர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திராவிட மாடல் ஆட்சியின் 51 மாதங்களுக்குள் இதன் மூலம் ₹50 ஆயிரம் வரை பெண்கள் சேமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 18, 2025

அமமுக உடன் ஓபிஎஸ் இருப்பார்: TTV தினகரன்

image

OPS-ஐ பாஜகவினர் NDA கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும் என்று TTV தினகரன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக OPS அறிவித்த நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய TTV, அமமுகவுடன் சேர்ந்து OPS தேர்தலை சந்திப்பார் என்றார். 2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்ற அவர், தொகுதியை ஜனவரியில் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!