News June 8, 2024

பாஜகவை உடைக்க வேண்டிய அவசியமில்லை: மம்தா

image

நேரம் வரும்போது INDIA கூட்டணி ஆட்சி அமைக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், INDIA கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாமெனவும், நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார். பாஜகவை INDIA கூட்டணி உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களின் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள் உருவாகத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

News June 8, 2024

உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த ரஷீத் கான்

image

நியூசி.,க்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஆப்கன் கேப்டன் ரஷீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக, நியூசி., கேப்டன் டேனியல் வெட்டோரி 20/4 விக்கெட்டுகள் எடுத்ததே சிறந்த பவுலிங்காக இருந்தது.

News June 8, 2024

INDvsPAK போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு

image

IND-PAK இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, நாளை இரவு நடைபெறவுள்ளது. போட்டியின் போது தாக்குதல் நடத்தப்படும் என சமீபத்தில் ISIS அமைப்பினர் அச்சுறுத்தியதால், பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, நியூயார்க், நாசாவ், அமெரிக்கா, FBI என பல்வேறு துறையைச் சேர்ந்த போலீசார் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

எதிர்க்கட்சித் தலைவர் ஆக ராகுல் தயக்கம்

image

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதனை ஏற்பதில் ராகுல் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. கட்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொறுப்பினை ஏற்பது குறித்து இதுவரை ராகுல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

News June 8, 2024

மாரிமுத்துவை Miss செய்யும் எதிர்நீச்சல் குழு

image

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் குணசேகரன்தான். அக்கதாப்பாத்திரத்துக்கு உயிர்கொடுத்த மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் குழுவினர் மாரிமுத்துவை Miss செய்கின்றனர்.

News June 8, 2024

டி20 உலகக் கோப்பை: நாளை 3 போட்டிகள்

image

அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், நாளை 3 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்-உகாண்டா அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளும், 10.30 மணிக்கு நடைபெறும் 3ஆவது போட்டியில் ஓமன்-ஸ்காட்லாந்து அணிகளும் மோதுகின்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் & ஹாட்ஸ்டாரில் காணலாம்.

News June 8, 2024

INDIA கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரலாம்: மம்தா

image

நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், சட்ட விரோதமான கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு வாழ்த்துக் கூற முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் பிளவு இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் INDIA கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரலாம் எனக் கூறியுள்ளார். மேலும், மோடி பதவியேற்பு விழாவில் திரி.காங்., கலந்துகொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

பாஜகவுக்கு பெரும்பான்மையாக வாக்களித்த ஏழைகள்

image

மக்களவைத் தேர்தலில் ஏழை மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மையாக வாக்களித்துள்ளதாக Lokniti-CSDS நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. INDIA கூட்டணிக்கு ஏழை சமூகத்தினர் மத்தியில் 14% வாக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரம், பாஜக கீழ்நிலை வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் 35% வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த முறை 36%ஆக இருந்தது. மேல்தட்டு வகுப்பு மக்கள் 41% பேர் காங்கிரஸுக்கும், 38% பேர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர்.

News June 8, 2024

₹18,000 பெற இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹18,000 நிதியுதவியை 5 தவணைகளாக வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையைப் பெற கர்ப்பம் தரித்த 12 வாரங்களுக்குள் கிராம, நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற வேண்டும். தற்போது RCH எண்ணை வீட்டிலிருந்தே பெற ஏதுவாக http://picme3.tn.gov.in என்ற இணையதளத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து RCH எண்ணைப் பெறலாம்.

News June 8, 2024

மத்திய அமைச்சரவை ஒரு பார்வை (3/3)

image

குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த பிரதமர் நினைத்தால், அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. கேபினட் அமைச்சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்கள். தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்.

error: Content is protected !!