News June 8, 2024

நாளை பதவியேற்கிறார் மோடி

image

நாளை (09.06.2024) மாலை 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கிறார் நரேந்திர மோடி. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 8000க்கும் அதிகமானோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் பங்கேற்கப் போவோரின் பெயர்களும் நாளை மாலை வெளியிடப்படவுள்ளது.

News June 8, 2024

பாரிஸிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள தோனி

image

2024 ஐபிஎல் தொடர் முடிவடைந்ததையடுத்து, CSK வீரர் தோனி தனது குடும்பத்துடன் பாரிஸிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள பிரபலமான இடங்களுக்கு தனது மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். இன்று ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை, தனது நண்பர்களுடன் சென்று பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News June 8, 2024

குறைபிரசவ ஆட்சி கலைந்து விடும்: நாராயணசாமி

image

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருப்பது அவமானம் என்றார். மேலும், மோடி தலைமையிலான குறைபிரசவ ஆட்சி விரைவில் கலைந்து விடும் என அருடம் கூறினார்.

News June 8, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு 104 ரன்கள் இலக்கு

image

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி, தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால், சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்துவீசிய பார்ட்மேன் 4, ஜென்சன், நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News June 8, 2024

யானைகளைக் காப்பாற்ற ஐகோர்ட் தீவிரம்

image

யானைகள் மின் வேலிகளில் சிக்கி உயிரிழந்தால் மின்வாரியத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன விலங்குகளை காப்பது தொடர்பான வழக்கில், கடுமையாக பேசிய நீதிபதி, யானைகளின் இறப்பினைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இல்லாவிட்டால், கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

News June 8, 2024

பிரேம்ஜி திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்

image

நடிகர் பிரேம்ஜிக்கு நாளை காலை 9 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. நீண்ட வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி, தற்போது 45 வயதில் திருமணம் செய்து கொள்ள போகிறார். கடந்த மே 30ஆம் தேதி திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது பிரேம்ஜி மணப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

News June 8, 2024

பள்ளி வேலைநாள் அதிகரிப்பு

image

2024 – 2025ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

News June 8, 2024

சர்வதேச அளவில் இடம்பெற்ற இந்திய சட்னிகள்

image

டேஸ்ட் அட்லஸ் நிறுவனம், உலகின் மிகச்சிறந்த 100 சட்னி வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் கொத்தமல்லி சட்னி 47ஆவது இடத்தையும், மாங்காய் சட்னி 50ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. சட்னி என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று. அதன் வகைகள் ஏராளம். புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி, கடலை சட்னி என சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு எது பிடிக்கும்?

News June 8, 2024

டெல்லியில் 144 தடை உத்தரவு

image

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், மோடி நாளை பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இதையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி பதவியேற்பு விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பது, குறிப்பிடத்தக்கது.

News June 8, 2024

தடுமாறும் நெதர்லாந்து அணி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், நெதர்லாந்து அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அபாரமாக பந்துவீசிய மார்க்கோ ஜென்சன் 2, பார்ட்மேன், நோர்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

error: Content is protected !!