News June 8, 2024

அது மாநில தலைமை தவறல்ல: தமிழிசை

image

தமிழிசை, அண்ணாமலை இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், தான் தலைமையை குறை கூறவில்லை என தமிழிசை கூறியுள்ளார். தேர்தலில் பலமான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்ற அவர், அப்படிப்பட்ட கூட்டணி அமைக்காதது மாநில தலைமையின் தவறு எனக் கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றிபெறாத நான் மத்திய அமைச்சர் பதவியை உரிமையுடன் கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

News June 8, 2024

ரீ-ரிலீஸில் 50 நாள்களை கடந்த ‘கில்லி’

image

‘கில்லி’ திரைப்படம், ரீ-ரிலீஸில் 50 நாள்களை கடந்துவிட்டதாக சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், கடந்த ஏப்.20ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து, விஜய் பிறந்தநாளையொட்டி, போக்கிரி, துப்பாக்கி படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளன.

News June 8, 2024

2026 இல் ஆட்சியைப் பிடிப்போம்: சீமான்

image

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மாநில கட்சி அந்தஸ்தைப் பெறக் காரணமான மக்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். வெற்றி இலக்கை அடைய முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்த அங்கீகாரத்தை தக்கவைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உறுதியேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

இந்திய பிரதமர் பதவிக்கு மாத சம்பளமாக ₹1.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அடிப்படை சம்பளம் ₹50,000, இதர செலவுகள் ₹3000, நாடாளுமன்ற உதவித் தொகை ₹45,000, அன்றாட உதவித் தொகை ₹60,000 (நாளொன்றுக்கு ₹2000) ஆகியவை அடங்கும். இருப்பிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும். SPG பாதுகாப்பு செலவுகளை பாதுகாப்புத் துறை ஏற்றுக் கொள்ளும்.

News June 8, 2024

அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஏன்?

image

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு, 4 ஆண்டுகள் வரை மாதம் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகள் முடிந்த பிறகு, அதிலிருந்து 25% பேர் மட்டும் திறமையின் அடிப்படையில் நேரடியாக இந்திய ஆயுத படைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், நீண்டகால பணி, ஓய்வூதியம், சலுகைகள் என எதுவுமே இத்திட்டத்தில் கிடையாது. இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே பாஜக அரசு கொண்டு வந்தது.

News June 8, 2024

அக்னிவீர் திட்டத்தில் கறார் காட்டும் நிதிஷ் குமார்?

image

அக்னிவீர் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தும், பாஜக அரசு அதை ரத்து செய்யவில்லை. உ.பி., பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததற்கு இத்திட்டமும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பாஜகவுக்கு நிதிஷ் குமார் அழுத்தம் தருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 8, 2024

திணறும் தென்னாப்பிரிக்கா

image

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி திணறி வருகிறது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, முதல் ஓவரிலேயே தேவையில்லாமல் ரன் அவுட்டில் ஒரு விக்கெட்டை இழந்தது. அதனைத் தொடர்ந்து, மார்க்ரம், ஹென்ரிக் க்ளாஸன், ஹென்ரிக்ஸ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்த ஓவர்களில் வரிசையாக ஆட்டமிழக்க, பவர் பிளே முடிவில் 16/4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

News June 8, 2024

23 ஆண்டுகளை நிறைவு செய்த சிட்டிசன்

image

சரவணா சுப்பையா இயக்கத்தில் அஜித், மீனா, வசுந்தரா தாஸ் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் “சிட்டிசன்”. பாடகியான வசுந்தரா தாஸ், இப்படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமின்றி இரண்டு பாடல்களும் பாடியிருந்தார். மாறுபட்ட பல வேடங்களில் நடித்திருந்த அஜித், அவரது ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் பாராட்டைப் பெற்றார். இப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?

News June 8, 2024

இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

இங்கிலாந்து பவுலிங் தேர்வு

image

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற இங்கி., அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பலம் வாய்ந்த 2 அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். முதல் போட்டியில் வெற்றி பெற்று ஆஸி., அணி 2 புள்ளிகளுடனும், மழையால் போட்டி ரத்தானதால் இங்கி., அணி 1 புள்ளியுடனும் உள்ளன. யார் வெற்றி பெறுவார் என கமெண்டில் சொல்லுங்க.

error: Content is protected !!