News June 9, 2024

இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. அந்த அணியின் வார்னர் 39, மிட்சல் மார்ஷ் 35, ஹட் 34, மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

News June 9, 2024

பாஜகவுக்கு பின்னடைவும் இல்லை: பட்னாவிஸ்

image

மகாராஷ்டிரா தேர்தல் தோல்வியால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அம்மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி தன்னை எந்த விதத்திலும் மனதளவில் பாதிக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஆளும் மகா கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 42 இடங்களில் 29 இல் வெற்றி பெற்றது.

News June 9, 2024

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் SA அணி வெற்றி

image

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணி, தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியும் ஆரம்பத்தில் திணறியது. இறுதியில் 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் டேவிட் மில்லர் 59 ரன்கள் எடுத்தார்.

News June 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News June 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 2026இல் ஆட்சியைப் பிடிப்போம்: சீமான்
➤ பாஜகவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை: மம்தா
➤ கோவையில் முப்பெரும் விழா: திமுக அறிவிப்பு
➤ மோடி பதவியேற்புக்கு இதுவரை அழைப்பில்லை: காங்கிரஸ்
➤ நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
➤ ‘மகாராஜா’ படத்தின் முதல் பாடல் வெளியானது

News June 9, 2024

மகள் பெயரை டாட்டூ குத்திய ரன்பீர் கபூர்

image

நடிகர் ரன்பீர் கபூர், தனது மகள் பெயரை டாட்டூவாக பதிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரன்பூர் கபூர், அலியா பட் ஜோடிக்கு ராஹா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் மீது அதீத அன்பு வைத்திருக்கும் ரன்பீர் தனது மகளின் பெயரை தோள்பட்டையில் டாட்டூ குத்தியுள்ளார். மும்பையில் அலியா, ரன்பீர் கட்டிவரும் சொகுசு பங்களாவை ராஹா பெயரில் பதிவு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

பாம்பு கடித்தவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன?

image

பாம்பு கடித்தவருக்கு மருத்துவமனை செல்லும் முன்பு சில முதலுதவி சிகிச்சை அளிப்பது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பதற்றப்பட்டால் இதயதுடிப்பு அதிகமாகி விஷம் வேகமாக பரவும் என்பதால், பாம்பு கடிபட்டவர் அமைதியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாம்பு கடித்த இடத்தை சுத்தப்படுத்தி, விஷம் பிற பகுதிக்கு பரவாதபடி கட்டுப்போட வேண்டும். பிறகு, தாமதிக்காமல் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும்.

News June 9, 2024

கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

image

நடிகருக்கோ, எம்பிக்கோ மற்றவர்களின் தாய் குறித்துப் பேச உரிமை கிடையாது என நடிகை கங்கனா ரனாவத்துக்கு பஞ்சாப் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கங்கனாவை பெண் CISF காவலர் அறைந்தது குறித்துப் பேசிய அவர்கள், கங்கனா பேசியது தவறு என்றும், அதற்காக அவர் மீது பஞ்சாப் அரசு வழக்கு பதிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். கங்கனா ராவத்தை கண்டித்து அணிவகுப்பு நடத்தப்படும் என்றும் கூறினார்.

News June 8, 2024

பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு

image

இந்தோனேசியாவில் ஃபரிதா (45) என்ற பெண்ணை 16 அடி நீளமுடைய ராட்சத மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரிதா காணாமல் போன நிலையில், கலேம்பாங் கிராமத்தை சேர்ந்த மக்கள் அவரை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடமைகள் கண்டறியப்பட்ட இடத்தில் தீவிரமாக தேடிய போது, ராட்சத பாம்பு வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது. பிறகு, அதன் வயிற்றை கிழித்து ஃபரிதாவின் உடல் மீட்கப்பட்டது.

News June 8, 2024

கங்கனாவை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு

image

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கங்கனாவை அறைந்த அந்த காவலருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!