News April 26, 2024

ஏப்ரல் 30, மே 1, 2ஆம் தேதிகளில் மழை பெய்யும்

image

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 26, 2024

ஏப்ரல் 30, மே 1, 2ஆம் தேதிகளில் மழை பெய்யும்

image

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 2இல் லேசான மழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 26, 2024

சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

image

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி இன்று 150 புள்ளிகளை இழந்து 22,419 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 609 புள்ளிகளை இழந்து 73,730 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

News April 26, 2024

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்து பிடுங்கப்படும்

image

விவசாயிகளிடம் வாரிசு வரியை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்வதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை பாதி பிடுங்கிவிடுவார்கள் என்றும் அவர் பிஹார் பரப்புரையில் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜஸ்தானில் இதே மாதிரியான சர்ச்சை கருத்துக்களை அவர் தெரிவித்ததால் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

News April 26, 2024

மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிக் விநியோகிப்பீர் என மத்திய அரசிடம் ஐகோர்ட் வினவியுள்ளது. தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. அப்போது, அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என வினவிய கோர்ட், அது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

News April 26, 2024

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் EVM முறை ரத்து

image

INDIA கூட்டணி வென்றவுடன் வாக்குப்பதிவு இயந்திர முறை (EVM) நீக்கப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இவிஎம் பயன்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றாலும், இவிஎம்-க்கு எதிரான போராட்டம் தொடரும் என்ற அவர், தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார். முன்னதாக இவிஎம் பயன்பாட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

News April 26, 2024

பைக் மைலேஜை அதிகரிக்கும் வழிகள்

image

*சரியான இடைவெளியில் பைக்கை சர்வீஸ் விட வேண்டும். *இன்ஜின் ஆயிலைச் சரியான நேரத்தில் மாற்ற வேண்டும். *டயர்களின் பிரஷரை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். *கலப்படம் இல்லாத சிறந்த எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். *குண்டு, குழிகளில் ஏற்றி இறக்காமல் சரியான முறையில் ஓட்ட வேண்டும். *சராசரியாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பைக்கை ஓட்டலாம். *போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பைக்கை அணைத்து வைக்கலாம்.

News April 26, 2024

கோலி இல்லாத டி20 அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ச்ரேகர்

image

சஞ்சய் மஞ்ச்ரேகர் தேர்வு செய்துள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலிக்கு இடம் இல்லை. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார், ரிஷப் பந்த், கே.எல் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, சிராஜ், அவேஷ் கான், ராணா, மயங்க் யாதவ், குருணால் பாண்டியா அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளாக கோலி டி20 இந்திய அணியில் விளையாடாததால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்…

image

*வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்தச் சோகையை நீக்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
*உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும்.
*தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும்.
*இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
*வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை உறுதியாக்கும்.

News April 26, 2024

தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுங்கள்

image

கோடை வெயிலைச் சமாளிக்கத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பணி நிறுவனங்களுக்குத் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சுழற்சி முறையில் வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கத் துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!