India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொரோனா அச்சத்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரை சாப்பிட்ட பலர், தொற்று முடிவுக்கு வந்த பிறகும் சாப்பிட்டு வருகின்றனர். சத்து குறைந்தோருக்கு மட்டுமே வைட்டமின் மாத்திரையை பரிந்துரைப்பதாகவும், ஆதலால் தங்கள் பரிந்துரையின்றி வைட்டமின் மாத்திரையை சாப்பிடுவது, இதயநோய், சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்களவையில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரையில் பல பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் உண்மையான கள நிலவரத்தையே தனது பேச்சில் குறிப்பிட்டதாகவும், காரணமற்ற முறையில் தனது உரையின் முக்கிய பகுதிகளை சபாநாயகர் நீக்கியது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவை நடிப்பில் இயக்க உள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துவிட்டு இப்படத்தை தொடங்க உள்ளதாகவும், வடசென்னை போன்ற தன்னுடைய பெரிய பட்ஜெட் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை எனவும், ‘வாடிவாசல்’ படத்தின் 2ஆம் பாகம் எடுக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ரயில்களின் அட்டவணை மாற்றப்படும். அதில், புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்புகள் கூட வெளியாகும். ஆனால், இந்த ஆண்டுக்கான அட்டவணை மாற்றம் 2025, ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக புதிய அட்டவணை தயாரிக்கும் பணி தாமதமாவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 50% பள்ளி மானியம் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை, அடுத்த 3 நாள்களில் பள்ளி மேலாண்மை குழுவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர், பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியாவின் தேசிய பூச்சி எது என்பது அனைவருக்கும் தெரியுமா? என்பது சந்தேகமே. அது என்னவென்பதை தெரிந்து கொள்வோம். பாபிலியோனிடே அல்லது ஸ்வாலோடெயில்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சியே இந்தியாவின் தேசிய பூச்சியாக கருதப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 89 வகை வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன.

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை; திமுக ஆட்சியில்தான் விற்கப்படுகிறது என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனைக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அண்ணாமலை, தலைவர்களை பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை கற்றுக்கொண்டு வர வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார்.

‘கூழாங்கல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் பிரபலப்படுத்தினார். இவர் அடுத்ததாக நடிகர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் பெர்லின் மற்றும் டிரான்சில்வேனியா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற FEST திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ‘GOLDEN LYNX AWARD’விருதை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இருமடங்கு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி வரை சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.39 செ.மீ. மழை பதிவாகி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு 11 செ.மீ. மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 110% அதிகம் ஆகும்.

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே அரசுப் பேருந்தில் பயணிக்க ₹50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ₹56 வசூலிக்கப்படுவதால் நடத்துநர்கள், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதிகாரிகள் சொல்வதைதான் தாங்கள் செய்வதாக நடத்துநர்கள் கூறுகின்றனர். PPR எனப்படும் Point-to-Point பேருந்துகளில்தான் ₹56 வசூலிக்கப்படுவதாக பணிமனை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.