India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PAK-க்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த போட்டியில், USA அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கென்சிஜின் பந்துவீச்சில் பாக்., திணறியது. இதன் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், ஒரு ஓவர் மட்டும் வீசிய அக்ஸர் படேலுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15ல் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் ஜூன் 10க்குள் எமிஸ் மூலம் பதிவேற்ற வேண்டும். மறுநாள் கல்வி அலுவலர் அதற்கான ஒப்புதலை வழங்குவார். வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வு ஜூன் 14, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 15ல் நடைபெறும்.

பிரதமர் மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஜேடியு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா 8 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் வரை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வாக்கு எண்ணும் நாளன்று ஆரம்பத்தில் INDIA கூட்டணி முன்னிலை வகிப்பது போல் இருந்தது. இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த சத்தீஸ்கர் பாஜக தொண்டர் துர்கேஷ் பாண்டே (30) அருகிலுள்ள காளி கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டார். பின்னர், மதிய நேரத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்றவுடன் அதே காளி கோயிலுக்குச் சென்று விரலை வெட்டி காணிக்கையாக்கினார். மருத்துவர்கள் போராடியும் விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை.

நேரு 1947-1964 வரை 3 முறை தொடர்ந்து பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திரா காந்தி, 1966-1977 வரை 2 முறையும், 1980-1984 வரை ஒருமுறையும் பிரதமராக இருந்துள்ளார். அடல் பிகாரி வாஜ்பாய், 1996, 1998, 1999-2004 வரை 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். அதையடுத்து நரேந்திர மோடி 2014 -2024 வரை 2 முறை பிரதமராக இருந்துள்ளார். இன்று தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராகி நேரு சாதனையை சமன் செய்யவுள்ளார்.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை குலதேவதை என்றும் அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். ஆறு பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக (240 எம்பிக்கள்) உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான இலாக்காக்கள் நேற்று இறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 7.15 மணி அளவில், இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் போவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் பிராண்டன் கிங் விளையாடி வருகின்றனர். 2 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

தன்னுடைய பெயரை மட்டுமே முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட மோடி, அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்டார் என சோனியா காந்தி விமர்சித்துள்ளார். தேர்தல் முடிவுகளின் படி ஆட்சியமைக்கும் உரிமையை இழந்த அவர், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகாமல், இன்று மீண்டும் பிரதமராக உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்., தோல்வியடைந்த இடங்களில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

➤ பிரதமராக மோடி இன்று பதவியேற்பு
➤ எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயக்கம்
➤ பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் – அமித் ஷா
➤ ஜூன் 12இல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு
➤ டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியுடன் இந்தியா இன்று மோதல்
➤ நடிகர் பிரேம்ஜி – இந்து ஜோடிக்கு இன்று திருத்தணியில் திருமணம்
Sorry, no posts matched your criteria.