News June 9, 2024

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

image

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டியான இந்தியா – பாகிஸ்தான் இன்று நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையைத் தொடர்ந்து, இரு அணிகளும் உலகக் கோப்பை தவிர வேறு எங்கும் நேருக்கு நேர் மோதுவதில்லை. ஆகையால், சுமார் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இரு அணிகளும் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், யார் வெல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News June 9, 2024

பழங்குடியின பாதுகாவலரின் நினைவு நாள்

image

ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் பழங்குடிகளால் தெய்வமாக வணங்கப்படும் ‘விடுதலை வீரன்’ தான் பிர்ஸா முண்டா. ஏகாதிபத்தியத்தையும், சாதியத்தையும் எதிர்த்து போராடிய பிர்ஸா, தனது 24 வயதில் வீரமரணம் அடைந்தார். எனினும், பிர்ஸா தொடங்கிய பழங்குடி மக்களின் நிலத்துக்கான போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை. அம்மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

News June 9, 2024

சபாநாயகர் பதவியை கைப்பற்றிவிடுங்கள்

image

முடிந்தவரை சபாநாயகர் பதவியை கைப்பற்றிவிடுங்கள் என்று ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தெலுங்குதேசம் கட்சிக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை கூறியுள்ளார். சபாநாயகர் பதவி கிடைக்காவிட்டால் பாஜக உங்களது எம்பிக்களை அபகரித்துக் கொள்ளும் என்றும் அதன்பின் கட்சி உங்களது இல்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே, இரு கட்சிகளும் சபாநாயகர் பதவியை கேட்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

நியூயார்க் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதா?

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ள நியூயார்க் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என செய்தி பரவி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் ஷர்மா, அந்த மைதானத்தை உருவாக்கியவருக்கே அங்கு எப்படி விளையாடுவது என தெரியாது என்றும், அப்படியிருக்கையில் இந்திய அணிக்கு எப்படி சாதகமாக இருக்கும் என்றார்.

News June 9, 2024

காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மோடி

image

டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி & வாஜ்பாய் நினைவிடங்களில், மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் 292 தொகுதிகளில் வென்ற NDA கூட்டணி அரசின் பிரதமராக, 3ஆவது முறையாக மோடி இன்று பதவியேற்க உள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் பதவியேற்பு விழாவில், பிரதமருடன் 10-15 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 9, 2024

மூன்று ஹீரோயின்கள் இணைந்து நடிக்கும் சீரியல்

image

சன் டி.வி.,யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘மல்லி’. இத்தொடரில் 1980’களில் கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் நளினி, பூர்ணிமா, அம்பிகா மூவரும் இணைந்து நடிக்கிறார்கள். மூன்று பேருமே சின்னத்திரையில் தனித்தனியாக தொடர்ந்து நடித்து வந்த நிலையில், தற்போது இத்தொடரில் ஒன்றாக நடிக்க உள்ளார்கள். ஒரே தொடரில் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

News June 9, 2024

பள்ளித் திறப்பு: மாணவர்கள் கவனத்திற்கு

image

* திறப்பு நாளன்றே (10.06.2024) நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன
* புதிய பேருந்து பயண அட்டைகள் கிடைக்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம்
* முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளைத் தொடர்ந்து நாளை (10.06.24) பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
* 2024 – 25 கல்வியாண்டில் 220 நாள்கள் பள்ளி செயல்படும்

News June 9, 2024

210 பாலஸ்தீனர்களை கொன்று 4 பேரை மீட்ட இஸ்ரேல்

image

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, அங்கிருந்த ஏராளமானோரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் 4 பேர் காசாவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. பின்னர், அதிரடியாக ஊடுருவி 4 பேரை மீட்டுச் சென்றது. இஸ்ரேல் தாக்குதலில் 210 பாலஸ்தீனர்கள் பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

News June 9, 2024

துஷ்ட சக்திகளை தூர விரட்டும் அனுமன்

image

திருப்பதி மலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் அனுமன் அவதரித்ததாக ஆஞ்சநேய புராணம் கூறுகிறது. தாய் அஞ்சனா தேவியுடன் கூடிய ஸ்ரீபால ஆஞ்சநேயர் தனிக் கோவில் கொண்டருளும் இந்த திருத்தலத்திற்கு சென்று, வெண்ணை காப்பு செய்து, துளசி மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, செந்தூரத்தால் அர்ச்சித்து, மிளகு வடை படைத்து வழிபட்டால் துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

News June 9, 2024

நடு வழியில் நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

image

நேற்றிரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாகத் தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த பயணிகள், விருத்தாசலம் அருகே ரயிலை நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்களின் சமாதானத்துக்குப் பின், ரயில் புறப்பட்டுச் சென்றது. அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யாதவர்கள் இறக்கிவிடப்பட்டனர்.

error: Content is protected !!