News June 9, 2024

JEE தேர்வு முடிவுகள் வெளியானது

image

நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான JEE Advanced நுழைவுத் தேர்வின் முடிவுகள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த வேத் லஹோதி 360க்கு 355 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார். மும்பை பகுதியைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ் பெண்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். முடிவுகளை தெரிந்துகொள்ள <>இங்கே க்ளிக் செய்யவும்.<<>>

News June 9, 2024

டி20 WC: இந்திய அணியின் பலம், பலவீனம்

image

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்றிரவு விளையாடவுள்ள இந்திய அணியை பொருத்தவரை ரோஹித், கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருப்பதும், பும்ரா, அர்ஸ்தீப், சிராஜுடன் சேர்ந்து ஆல்ரவுண்டர் பாண்டியாவும் பந்துவீச ஆரம்பித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சூரியகுமார் யாதவின் சொதப்பலான பேட்டிங், அணியில் குல்தீப் யாதவ் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது.

News June 9, 2024

கடற்படை ஹெலிகாப்டர் படையின் முதல் பெண் விமானி

image

விமானப்படை, ராணுவத்தை தொடர்ந்து இந்திய கடற்படையும் தமது ஹெலிகாப்டர் படைப்பிரிவில் பெண் விமானியை சேர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, அரக்கோணம் INS ராஜாளி தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த சப் லெப்டினென்ட் ஜெனரலான அனாமிகா ராஜீவ், முதல் பெண் விமானியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் லடாக்கைச் சேர்ந்த ஜம்யாங் தேஸ்வாங் உள்பட மேலும் 20 பேர் ஹெலிகாப்டர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News June 9, 2024

அரசு ஊழியர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்

image

அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் & அவர்களது குடும்பத்தினர் ₹5 லட்சம் வரை அறுவை சிகிச்சைகளை பெறலாம். அத்துடன், ₹10 லட்சம் வரை சிறப்பு சிகிச்சைகளை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர சிகிச்சை பெறுவதில் நீடித்துவந்த சிக்கல் தீர்ந்ததாக பயனாளிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

News June 9, 2024

அதிகரித்து வரும் மருத்துவம் படிக்கும் மோகம்

image

நாட்டில் டாக்டர் ஆக விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி என்று நுழைவுத் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். 2019இல் 15,19,375 நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர் எண்ணிக்கை 2024இல் 24,06,079 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு கல்வியாண்டுக்கு சராசரியாக 1.53 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

News June 9, 2024

36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெயில்

image

36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மே மாதம் நாட்டில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. 1988 மே மாதம் அதிகபட்ச சராசரியாக 37.4 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகவும், அதன்பிறகு, கடந்த மே மாதம் 37.3 டிகிரி பதிவானதாகவும் IMD கூறியுள்ளது. இதேபோல், 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏப்ரலில் அதிகபட்ச சராசரியாக 35.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளதாகவும் IMD கூறியுள்ளது.

News June 9, 2024

ஓபிஎஸ்சை ஆதரவாளர்கள் கைவிட்டது ஏன்?

image

ஓபிஎஸ் ஆதரவாளர்களான பெங்களூரு புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அவர் அணியிலிருந்து விலகி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமியுடன் சேர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுகவை ஒருங்கிணைப்பதே நோக்கம் என அவர்கள் கூறிய போதிலும், மக்களவைத் தேர்தலில் தனக்கு மட்டும் சீட் வாங்கி போட்டியிட்ட ஓபிஎஸ் மீதான அதிருப்தியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

News June 9, 2024

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே

image

NDA கூட்டணி அரசின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் அந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்குமாறு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News June 9, 2024

டி20 உலகக் கோப்பையில் ஒரு அரிய சாதனை

image

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் AUS – ENG அணிகள் இடையிலான 17ஆவது லீக் போட்டியில், அறிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அதாவது, டி20 WC வரலாற்றில், குறிப்பிட்ட ஒரு போட்டியில் ஒரு ஆட்டக்காரர் கூட 50+ ரன்களை எடுக்காமல், அதிக ரன்கள் (366 ரன்கள்) குவிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம் (AUS 201, ENG 165). இதற்கு முன், 2010இல் SA Vs NZ போட்டி (327) இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

News June 9, 2024

சற்று நேரத்தில் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகிறது

image

இன்று காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிடவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி, அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள் என்று நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

error: Content is protected !!