India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மாநிலங்களில் 42 முக்கிய அணைகளின் நீர்மட்டம் பெரும் சரிவடைந்துள்ளது. மத்திய நீர்வள ஆணைய புள்ளி விவரங்களில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள 42 அணைகளில் 2023ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 53.3 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் இருந்ததாகவும், தற்போது 8.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை குறைவாக பெய்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தேனி வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரியம்மன் கோயில். மதுரையை முன்பு ஆண்ட வீரபாண்டியனுக்கு பார்வை பறிபோன நேரத்தில், தற்போது கோயில் உள்ள இடத்தில் எழுந்தருளிய கெளமாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி, பார்வை பெற்றார் என்பது வரலாறு. இதனால் அங்கு அவர் கோயில் கட்டினார். எனவே அவரது பெயரால் அந்த ஊர், வீரபாண்டி என அழைக்கப்படுகிறது. இங்கு வழிபட்டால், கண் நோய் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை 18.4 ஓவரிலேயே எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன், 2020இல் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக 224 ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்றது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்.15ஆம் தேதி மும்பையில் சல்மான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு இருவர் தப்பியோடினர். இது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிஷ்னோய் சகோதர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
உக்ரைனுக்கு 6 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்நிலையில், NASAMS எனப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பு, ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதற்காக, அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கூடுதலாக ஆயுதங்களை அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லீம் லீக்கின் நிகழ்ச்சி நிரல் போன்று, சிறுபான்மையினருக்கு தனியாக சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரின் பெமேதராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வுக்கு வர மறுத்த காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டை ஆள்வதற்கு எந்த உரிமையும் இல்லையெனவும் விமர்சித்துள்ளார்.
▶ஏப்ரல் – 27 | ▶ சித்திரை – 14 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: சதுர்த்தி ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:00 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 09:30 – 10:30 வரை ▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை ▶சந்திராஷ்டமம்: அசுபதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துன்பத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
காலையில் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. உடற்பயிற்சி நடை, நடனம், யோகா என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுவதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மூளையின் செயல்திறன் அதிகரிப்பதால் அல்சைமரின் தாக்கம் குறையும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுவதோடு, காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுமென அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம். கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.