India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் மாநகராட்சி தேர்தலில் நின்றால்கூட அண்ணாமலையால் வெற்றிபெற முடியாது
என்று காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் கிண்டலாக கூறியுள்ளார். பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது எனக் கூறிய அவர், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழிசை ஆளுநர் பதவியைவிட்டு விலகி இருக்கக் கூடாது என்றார். அத்துடன், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

SMS மூலமும் ரயிலில் டிக்கெட் உள்ளதா, இல்லையா என்பதை அறியும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்கு நமது செல்ஃபோனில் இருந்து 139 என்ற எண்ணிற்கு, SEAT என டைப் செய்து, ரயில் எண், பயணிக்கும் தேதி, பயணம் தொடங்கும் இடம்- இறங்கும் இடத்தின் எஸ்டிடி கோடுகள், பயணிக்க விரும்பும் வகுப்பு ஆகியவற்றை இடைவெளிவிட்டு பதிவிட்டு அனுப்ப வேண்டும். உடனே பதில் வரும். இதற்காக, கட்டணமாக ₹3 வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தாலும், பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் பெரும்பாலும் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இந்த நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை, படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசியல் பணிகளை தொடர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கான டெல்லி தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லையா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதன் மூலம், அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக மேலிடம் அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களை வைத்து கட்டணம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பணி, தற்போது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற பின், துறை ரீதியான பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமென மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்ற பாஜக எம்.பி.,க்களிடையே பேசியபோது, அவர் இந்த அறிவுரையைக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், எல்.முருகன் கலந்துகொண்டுள்ளதால் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் உறுதியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கலாம் என ராமதாஸ் கூறியதாகவும், ஆனால், பாஜகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டுமென்ற அன்புமணியின் வலியுறுத்தலை பிறகு ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாமக, 6 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதனால் நொந்து போன ராமதாஸ், அன்புமணியை கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 15 – 1964 மே 27 வரை 16 ஆண்டுகள் 286 நாள்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரே நீண்டகால பிரதமர் எனும் பெருமை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து, அதிகபட்சமாக இந்திரா காந்தி 15 ஆண்டுகள் 350 நாள்கள் பிரதமராக இருந்துள்ளார். மன்மோகன் சிங் தொடர்ந்து 10 ஆண்டுகள் 4 நாள்களும், மோடி தொடர்ந்து 10 ஆண்டுகள் 13 நாள்களும் இருந்துள்ளனர். இன்று மீண்டும் மோடி பதவியேற்கிறார்.

NDA கூட்டணி அமைச்சரவையில், ராஷ்ட்ரிய லோக் தளம் – ஜெயந்த் சவுத்ரி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – ஜிதன் ராம் மஞ்சி, எல்.ஜே.பி – சிராக் பாஸ்வான், ஜேடியு – ராம் நாத் தாக்கூர், மஜக – குமாரசாமி, சிவ சேனா ஷிண்டே – பிரதாப் ஜாதவ், தெ.தே.க – ராம் மோகன் நாயுடு & சந்திரசேகர் பெம்மாசானி, குடியரசுக் கட்சி (அ) – ராம்தாஸ் அத்வாலே ஆகிய கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.