India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சசிகுமார் மற்றும் சூரி நடித்த கருடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, கருடன் திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து நல்ல சினிமாவை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையில் கவனமாக செல்லவும்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்று விமர்சித்த அவர், நாடக நடிகரை போல நடை, உடை, பாவனையை மோடி காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது அத்தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் என ராகுலை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன் என ராகுல் முன்கூட்டியே வயநாடு மக்களிடம் ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வயநாடு தொகுதியில், ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் குற்றவாளிகள் இருப்பதை தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெல்வோம் என்று கூறியவர்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாஜக கூட்டணி அரசு நிலைத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றார். INDIA கூட்டணி எதிர்க்கட்சியாக பணியாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும், கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன. இதில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பும், 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேளையும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பல உச்ச நட்சத்திரங்கள் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில், தீபிகா படுகோனின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தீபிகாவின் புதிய தோற்றம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்.14, 21, அக். 5, 19, நவ.9, 23, டிச.14, 21 மற்றும் 2025இல் ஜன.11, பிப்ரவரி 1, 15, 22, மார்ச் 1,22, ஏப்.5 ஆகிய 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைத்த நிலையில், வரும் கல்வியாண்டில் விடுமுறை குறைந்துள்ளது.

தவெகவுடன் நாதக கூட்டணி அமைக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து விஜய் அறிவிப்பார் என TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கூட்டணி குறித்தும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விஜய்தான் முடிவு செய்வார் என்ற அவர், சட்டசபைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் இருப்பதால் அவசரம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஜூன் 18ல் TVK கூட்டம் நடத்த திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்

மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் அமைச்சராக பதவியேற்க உள்ளனர். பாஜகவை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஷோபா, பிரகலாத ஜோஷி, ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்கள். தமிழகத்தில் எல்.முருகன், உ.பி 9, ஆந்திரா 3, பிஹார் 8, மராட்டியம் 3 பேர் என அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அண்ணாமலை அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.