India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகக் கோப்பை டி20 போட்டியில் நியூ யார்க் நகரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் மழை காரணமாக டாஸ் தாமதமான நிலையில், பின்னர் டாஸ் வென்ற பாக்., பவுலிங்கை தேர்வுசெய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் மழை குறுக்கிட்டுள்ளதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. லேசான மழை பெய்து வருவதால் போட்டி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில், போட்டி தொடங்கும் முன் வீரர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் தேசிய கீதம் பாடுவது வழக்கம். முதலில் 1990களில் கால்பந்துப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட இம்முறை தற்போது அனைத்து விளையாட்டுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. எஸ்கார்ட் (அ) மஸ்காட் குழந்தைகள் என அழைக்கப்படும் இவர்கள், ஆரம்பத்தில் தொண்டு நிறுவனங்களின் அடையாளமாக அறியப்பட்டு, தற்போது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றனர்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் பருவத்தேர்வு ( முழு ஆண்டு தேர்வு) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மட்டும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை பணி நாளாக இருக்கும். ஏப்.18ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை (44 நாள்கள்) கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் ஒருசில முன்னாள் IAS, IFS அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் ஒடிஷா கேடரில் இருந்து IAS அதிகாரியாகி பாஜகவில் இணையும் முன் ஒடிஷாவில் பணியாற்றியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய் சங்கர் சீனா உட்பட பல நாடுகளில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

மோடி அமைச்சரவையில் 4 முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், ம.பி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் கேபினட் அந்தஸ்து கொண்ட பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிஷாவின் சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமிய பெண் சோபியா எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். பாராபதி-கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பூர்ண சந்திராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிஷாவில் இதுவரை 141 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்தெடுக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை.

டெல்லியில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவ்கோடா கோயிலிருந்து கத்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார், டூபே, பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்குகின்றனர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

2024 நீட் தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகளால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாகி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானாவில் நீட் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2024-25ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி, ஜூன் 6ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், 2.06 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த சூழலில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க ஜூன் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.