India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றுள்ள சரத்குமார் அங்கு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அந்தவகையில் மஜத தலைவர் குமாரசாமி, தெதேக தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்ற இந்த நாளில், ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் மிகப்பெரிய கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நாளில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிஞ்சு குழந்தைகள் முதல் முதியோர் வரை (10 பேர்) கொன்று குவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.

பிரதமர் மோடி அமைச்சரவையில் 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். இதில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமியும் இடம்பெற்றுள்ளார். குமாரசாமி மத்திய அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்ற குமாரசாமி கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு காங்., வேட்பாளர் வெங்கடரமண கவுடாவை 2.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.

மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள திருமாவளவனின் விசிகவிற்கும், சீமானின் நாதகவிற்கும், மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றதாகக் கூறிய அவர், அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டி20 WC போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி வருகிறது. விராட் கோலி 4 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். இந்தியா 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் களத்தில் உள்ளனர். இந்தியா இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் மோசமாக ஆடிவருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து நாளை ( ஜூன் 10ஆம் தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜனநாயகம் எவ்வளவு வலிமையானது என்பதை தேர்தல் முடிவின் மூலம் மக்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். வளர்ச்சிக்காக மட்டுமே பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய அவர், எங்கு மாற்றங்கள் தேவையோ அங்கு மாற்றங்களை செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், தேர்தல் முடிவின் மூலம் மக்களுக்கு குறைந்தபட்சம் EVM மீதான சந்தேகம் தீர்ந்துள்ளது என்றார்.

மோடியின் முந்தைய அமைச்சரவையில் முக்கிய முகமாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், ஸ்மிருதி இரானி, முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மீனாக்ஷி லேகி, ராஜூவ் சந்திரசேகர், நாராயண் ரானே உள்ளிட்டோர் மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். கடந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக எல்.முருகன் இருந்தார். புதிய அரசில் தற்போது அவருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

ஒடிஷாவில் பாஜக ஆட்சிக்கான பதவி ஏற்பு விழா, ஜூன் 12ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜூன் 10ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரதமரின் நிகழ்ச்சி நிரல் காரணமாக தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளதாக, பாஜக தலைவர் விஜய்பால் சிங் தோமர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒடிஷா முதலமைச்சர் யார் என்பது தான் இன்னும் சஸ்பென்ஸாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.