News June 10, 2024

ஸ்காட்லாந்துக்கு 151 ரன்கள் இலக்கு

image

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்காட்லாந்துக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஓமன் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. மிடில் ஓவர்களில் சற்று சரிவை சந்தித்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, பிரதிக் 54, அயான் 41 ரன்களும் குவித்தனர். அபாரமாக பந்துவீசிய ஷரீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News June 10, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News June 10, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
▶அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்: தமிழக அரசு
▶நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது: ராகுல் காந்தி
▶தமிழ்நாட்டில் அரசியல் பணிகளை தொடர உள்ளேன்: அண்ணாமலை
▶மத்தியில் ஒரு வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளது: ரஜினிகாந்த்
▶கூட்டணி குறித்து விரைவில் விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்

News June 10, 2024

உணவு அருந்தியதும் உடற்பயிற்சி செய்யலாமா?

image

உணவு அருந்தியதும் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. இதற்கு உடல்நல ஆலோசகர்களும், பயிற்சியாளர்களும் சில ஆலோசனைகளை அளித்துள்ளனர். அதாவது, முழு உணவு அருந்தியதும் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், நொறுக்குத் தீனி சாப்பிடும்பட்சத்தில், 30-60 நிமிடங்கள் பொறுத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

News June 10, 2024

ராமரை காட்டி மக்களை பிரிக்க முடியாது: தமிமுன் அன்சாரி

image

ராமரை காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளதாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்குகளை குறைந்தும், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக கூறிய அவர், முதல் தலைமுறை வாக்காளர்கள் INDIA கூட்டணியை விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அசைக்க முடியாத சக்தி என்ற பாஜகவை மக்களை அசைத்துள்ளனர் என்றார்.

News June 10, 2024

அமைச்சரவையில் இடம்பெற்ற 36 இணையமைச்சர்கள்

image

மோடியின் புதிய அமைச்சரவையில் எல்.முருகன், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட 36 இணையமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜார்ஜ் குரியன், ரக்சனா கட்சே, பபித்ரா மார்கிரேட்டா, சுகந்தா மஜூம்தார், அஜய் தம்தா, பண்டி சஞ்சய் குமார், டோகன் சாஹு, கமலேஷ் பாஸ்வான், பகீரத் சவுத்ரி, சதீஷ் சந்திர தூபே, சஞ்சய் தத், ரவநீத் சிங், துர்கா தாஸ், ராஜ் பூஷன் சவுத்ரி, பூபதி ராஜ் சீனிவாஸ், ஜெயந்தி ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

News June 10, 2024

ம.பி.,யின் நீண்ட கால முதல்வர் மத்திய அமைச்சரானார்

image

மத்திய பிரதேச மாநிலத்தில் 16.5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தற்போது முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். ம.பி.,யில் பாஜக சார்பில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், 1991 – 2006 வரை தொடர்ச்சியாக 5 முறை MPயாகவும் இருந்துள்ளார். அதன்பின் ம.பி முதல்வராக பதவி வகித்த அவர், சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று 6வது முறையாக MP ஆகியுள்ளார்.

News June 9, 2024

இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்

image

WC T20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்துள்ளது. ரிஷப் பண்ட் மட்டும் நிதானமாக ஆடி 42 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாக்., தரப்பில் அபாரமாக பந்து வீசிய நஸீம் ஷா, ஹரிஸ் ரஃப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

News June 9, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – மறதி ஏற்படும், *ரிஷபம் – ஓய்வு தேவை, *மிதுனம் – ஆசை உண்டாகும், *கடகம் – ஜெயம் உண்டாகும், *சிம்மம் – கோபம் வரும், *கன்னி – புகழ் உண்டாகும், *துலாம் – தடங்கல் ஏற்படும், *விருச்சிகம் – பகை ஏற்படும், *தனுசு – பணம் வரவு, *மகரம் – அன்பானவர்களை சந்திப்பீர்கள் *கும்பம் – லாபம் கிடைக்கும், *மீனம் – திறமைக்கு மதிப்பு கிடைக்கும்.

News June 9, 2024

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

image

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அரசமைப்பை நிலைநிறுத்த, மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதித்து செயல்படுவீர்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!