India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1801 – சிவகங்கையின் சின்னமருது, விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.
1940 – 2ஆம் உலகப் போர்: இத்தாலி பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
1940 – 2ஆம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940 – 2ஆம் உலகப் போர்: பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1956 – இலங்கையில் உள்ள அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மோடியின் நாடகம் இப்போது எல்லோருக்கும் தெரியும் என காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் அடையாளமாக உள்ளது என்றும், ஆனால், தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு தற்போது அடிபணிய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளாகக் குறிப்பிட்டுள்ளார்.

2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொதுத் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்ட கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி நடக்கிறது. தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 24 – 29ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது.

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் மற்றும் 41 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. பிராண்டன் மெக்முல்லன் (61), ஜார்ஜ் முன்செய் (41) ஜோடி சேர்ந்து அசத்தலாக விளையாடி, அணிக்கு மகத்தான வெற்றியைத் பெற்றுத் தந்துள்ளனர்.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: பிறனில் விழையாமை
▶குறள் எண்: 148
▶குறள்: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
▶பொருள்: வேறொருவன் மனைவியைக் தவறான எண்ணத்துடன் பார்க்காத குணம், மிகப்பெரிய அறம் மட்டுமின்றி, அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ரிஸ்வான், பாபர் அசாம், இஃப்திகார் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது அதிரடியான பந்துவீச்சால், தோல்வி விளிம்பில் இருந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங்கான வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது, பும்ரா, அர்ஷ்தீப் அபாரமாக பந்துவீசி அணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (அதிகாலை 4 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு நீட் தேர்வில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களால் கூட அரசு கல்லுாரிகளில் மருத்துவம் படிக்க முடியாமல் போகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.