News June 10, 2024

நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

image

பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் எடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாள்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

News June 10, 2024

NDA கூட்டணி அரசு 15 நாள்கள் நீடிக்குமா?

image

பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு 15 நாள்கள் நீடிக்குமா என்பது தெரியவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓரிரு நாள்கள் மட்டுமே நீடித்த அரசுகள்கூட இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம் எனக் கூறிய அவர், 1996இல் நடந்தது போல கவிழ்ந்திடக் கூட வாய்ப்புள்ளது என்றார். அத்துடன், நேரம் வரும்போது INDIA கூட்டணி ஆட்சியை அமைக்கும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

News June 10, 2024

தேர்தலை சந்திக்காமல் மத்திய அமைச்சரா?: நெட்டிசன்கள்

image

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் களத்தில் மக்களை சந்திக்காதவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருவரும் மாநிலங்களவை மூலம் அமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர்.

News June 10, 2024

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிரமத்தை தவிர்க்க இம்மாவட்டங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் சற்று முன்னதாகவே புறப்பட்டுச் செல்லவும்.

News June 10, 2024

மோடி அமைச்சரவையில் இளம் அமைச்சர்

image

தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், 36 வயதில் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல்முறை. மின் பொறியியலில் பட்டம் பெற்ற ராம் மோகன், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவரது தந்தை, முன்னாள் எம்.பியான மறைந்த கே யர்ரான் நாயுடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர்.

News June 10, 2024

மோடியை தமிழர்கள் நிராகரித்தனர்: ஜெய்ராம் ரமேஷ்

image

பிரதமர் மோடியின் பாசாங்குகளை தமிழ் வாக்காளர்கள் நிராகரித்துள்ளதை பாஜகவினர் மறந்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? தமிழர் வரலாற்றின் அடையாளமாக உள்ள செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாள். தமிழர்களை ஈர்க்க மோடி போட்ட நாடகத்தை அவர்கள் ரசிக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 10, 2024

ஒரேநேரத்தில் சென்னைக்கு படையெடுத்த மக்கள்

image

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, சொந்த ஊர்களில் இருந்து நேற்று மாலை முதல் அதிகளவில் மக்கள் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்கள் குவிந்ததால் உளுந்தூர்பேட்டை, பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 4 கி.மீ தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

News June 10, 2024

பாஜகவின் வளர்ச்சியும், அதிமுகவின் வீழ்ச்சியும்!

image

“தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது” என திராவிட தலைவர்கள் முழுங்கி வந்தாலும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சி இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகள் பெற்றதை புறந்தள்ள முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் சரிவு இதற்கு முக்கிய காரணம் எனவும், அதிமுக தன்னை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம் என்றும் கூறுகின்றனர். திமுகவும் பாஜகவின் நகர்வுகளை கவனிப்பது அவசியம் எனவும் தெரிவிக்கின்றனர்.

News June 10, 2024

APPLY NOW: மத்திய அரசில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 247 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியாளர், அதிகாரி (I, II, III) பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: B.E., MBA, PG Diploma. சம்பள வரம்பு: ₹50,000 – ₹2,80,000/-. வயது வரம்பு: 25-45. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30. மேலும் தகவல்களுக்கு <>HPCL<<>> இந்த முகவரியை கிளிக் செய்யவும்.

News June 10, 2024

பள்ளித் திறப்பு: மாணவர்கள் கவனத்திற்கு

image

ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளில், மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க, அரசுப் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன், புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க உள்ளன. மாணவர்கள் புதிய பேருந்து பயண அட்டைகள் கிடைக்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!