India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனதும் வெண்ணெய், நெய் இரண்டையுமே உணவில் சேர்த்துக் கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு வயது குழந்தைக்கு, நாள் ஒன்றுக்கு 5 கிராம் வெண்ணெயோ, நெய்யோ பயன்படுத்தினால் போதுமானது எனவும், எடை அதிகரிக்க, புரதம் அதிகளமுள்ள பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை கொடுக்கவும் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, சாப்பாட்டுக்கு முன் திரவ உணவு அளிப்பதை தவிர்க்கும்படி கூறுகின்றனர்.

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என, நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்ற பின் கருத்து தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற அவர், நேற்று இணை அமைச்சராக பதவியேற்றார். மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், படங்களில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், அமைச்சரவையில் இருந்து விரைவில் தன்னை விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

மோடி தலைமையில் 71 மத்திய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதில், 10 பேர் உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கோட்டையாக விளங்கிய உ.பி.யில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 33 தொகுதிகளிலேயே பாஜக வெற்றி பெற்றது. இருப்பினும், உ.பி.,யில் இருந்து 10 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அடுத்த ஓராண்டிற்குள் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) தெரிவித்துள்ளது. இந்த ‘ஏர் டாக்ஸி’ சேவையானது முதலில் சென்னையில் கொண்டுவரப்பட்டு பின்னர், மற்ற நகரங்களுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போயிங் உள்ளிட்ட வான் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு இச்சேவையை வழங்க உள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அன்பே வா’ சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கும், அவரது காதலர் வைசாக் ரவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஸ்ரீகோபிகாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீகோபிகா, சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார். பின்பு ’90ML’ திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ₹8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது ஆவின் நிறுவனம். தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை சேர்ந்த தம்பித்துரை (1985-1989 & 2014-2019) இருமுறை (9 ஆண்டுகள் 229 நாள்கள்) துணை சபாநாயகராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்ததாக, APHLC கட்சியைச் சேர்ந்த ஜிஜி ஸ்வெல் 6 ஆண்டுகள், 315 நாள்கள் துணை சபாநாயகராக இருந்துள்ளார். காங்கிரஸின் ஹுகம் சிங் (5 ஆண்டுகள்), பாஜகவின் கரியா முண்டா (4 ஆண்டுகள்), சிரோமணி அகாலி தளத்தின் சி.எஸ். அத்வால் (4 ஆண்டுகள்)துணை சபாநாயகராக இருந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,040க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹6,630க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ₹96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தான் இயக்கிய ஹீரோக்களுடன் தற்போது வரை நட்பில் இருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசிய அவர், சிம்புவால் தனக்கு பிரச்னை இல்லை என்றும், அவரது அப்பா, அம்மாவால்தான் பிரச்னை வந்ததாகவும் கூறியுள்ளார். சிம்பு படப்பிடிப்பிற்கு லேட்டாகத்தான் வந்ததாகவும், ஆனாலும், குறைந்த நேரத்தில் நடித்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தடகள போட்டியில், இந்திய வீராங்கனை சஞ்ஜிவானி ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் போர்ட்லாண்டில் நடந்த மகளிருக்கான 10,000 மீ., ஓட்டத்தின் தனி நபர் பிரிவில் கலந்துகொண்ட சஞ்ஜிவானி, பந்தய தூரத்தை 32 நிமிடம் 22.77 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2ஆவது இடம் பிடித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.