India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என காத்திருந்ததாகவும், அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமித் ஷாவிடம் பேச அவர் நேரம் கேட்டும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததில் இருந்து, அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ₹550 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க 15 – 20% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பேடிஎம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 5,000 முதல் 6,300 பேர் வேலையை இழக்கவுள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 14இல் தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தொடர்ந்து, ஜூலை 10இல் வாக்குப் பதிவு நடந்து, ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடாதது நல்ல முடிவு என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின்போது, தான் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறிய அவர், ஆட்டத்தில் ஏற்படும் சிறிய காயங்கள் கூட எரிச்சலூட்டியது என்றார். அத்துடன், ஐபிஎல் தொடரில் (RR அணி) இருந்து விலகி ஓய்வு எடுத்ததால்தான், தன்னால் உலகக் கோப்பை தொடருக்கு உடற்தகுதி பெற முடிந்தது எனக் கூறியுள்ளார்.

*ஈக்விட்டி ஃபண்டில் பணத்தை மொத்தமாக முதலீடு செய்யாமல், சீரான விகிதத்தில் முதலீடு செய்து வர வேண்டும். *சந்தை இறக்கத்தில் இருக்கும் போது SIPஐ நிறுத்தக் கூடாது. மாறாக, கூடுதல் பணத்தை முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும். *மியூச்சுவல் ஃபண்டில் கூட்டு வளர்ச்சி கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். *இலக்கை எட்டியதும், பணத்தை பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்ற வேண்டும்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், வெளிநாட்டு பணமாக மாற்றக்கூடிய பத்திரங்கள் (FCCB) மூலம் ₹3,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடனில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானி, கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி, கடன்களை அடைக்க முடிவெடுத்துள்ளார். மேலும், மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல புதிய தொழில்களை தொடங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. கடந்த ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்தலில், எதிர்கட்சியிடம் படுதோல்வியை சந்தித்தது ஃபிரான்ஸ் நாட்டின் ஆளுங்கட்சி. இதனால், தனது கட்சியின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் தேதிகளில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.

மோடி அமைச்சரவையில் நேற்று மத்திய இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்றார். இந்நிலையில், இன்று அமைச்சர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைமைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எம்.பியாக தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு சற்று முன், மாலை 6 மணி அளவில் ஜம்மு & காஷ்மீரில் ரியாஸி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலியாகினர். இதையடுத்து, சம்பவ இடத்தில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு அங்கு விரைந்துள்ளது.

உள்நாட்டுப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்று புதிய உச்சத்தைத் தொட்டது. காலையில் உயர்வுடன் தொடங்கிய வர்த்தகத்தால், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 77,000 புள்ளிகளையும், நிஃப்டி 23,411 புள்ளிகளையும் எட்டின. இருப்பினும், ஐடி & உலோகத் துறைகளின் பங்குகள் நஷ்டத்தை பதிவு செய்ததால், குறியீடுகளால் வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை. தற்போது நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 23,339 ஆக வர்த்தகமாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.