India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளை அவர் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது, ‘ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலாவதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு அரசு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கக் கூடாது என கூறிய அவர், ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு
தடை இல்லை என்றும் கூறியுள்ளார். அங்கு ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நாளை மறுநாள் ஆந்திரா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மனைவி லதாவுடன் டெல்லி சென்ற அவர், இன்று ஹைதராபாத் புறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியும், சந்திரபாபு நாயுடுவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பெரிதும் எதிர்பார்த்த உ.பி.,யில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்படுத்தியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற சமாஜ்வாதி, இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வென்றுள்ளது. இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது X பதிவில், சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன எனக் குறிப்பிட்டு, 2019 & 2024 தேர்தல் வெற்றியை ஒப்பிட்டு காட்டும் படத்தை பகிர்ந்துள்ளார்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 35.71% பங்குகளை சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் வைத்துள்ளது. ஆந்திரா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மெகா வெற்றியை பதிவு செய்த நிலையில், ஹெரிடேஜ் நிறுவனத்தின் பங்குகள் 105% விலை உயர்ந்தன. அந்த வகையில், கடந்த 12 நாள்களில் மட்டும், சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு ₹1,225 கோடி உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்பதால், கடற்கரையோரம் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென கடல் கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’ நிகழ்வு என்கின்றனர்.

உலகம் முழுவதும் பெரும்பாலான விமானங்களின் மேற்பூச்சு வெள்ளை நிறத்தில்தான் உள்ளன. இதற்கு அறிவியல் ரீதியிலான காரணம் உள்ளது. மற்ற நிறங்கள் புற ஊதா கதிர்வீச்சு & வெப்பத்தை அதிகம் உள்வாங்கும். ஆனால், வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து வெப்பம் உள்வாங்காமல் தடுக்கும். வான் பரப்பில் பறக்கும்போது விமானங்கள் அதிகம் சூடாகாமல் தடுக்கவே, வெள்ளை நிறத்தை தேர்வு செய்கிறார்கள்.

இந்திய கூடைப்பந்து அணியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்காட் பிளெமிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிளெமிங், ஏற்கெனவே 2012-2015ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ், இந்தியா தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் இருமுறை தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. விரைவில் ஆசிய விளையாட்டில் இந்திய பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார். அது தொடர்பான அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலே இலக்கு என குறிப்பிட்டிருந்தார். தற்போது, கட்சித் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், அவர் மக்கள் பிரச்னைகளில் கருத்து கூறாமல், வெறும் வாழ்த்து மட்டும் தெரிவித்து வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒடிஷாவின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய பார்வையாளர் குழு ஒன்றை பாஜக டெல்லி மேலிடம் அமைத்துள்ளது. இந்த குழுவில், பாஜகவின் மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், பூபேந்தர் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கும் குழுவின் கூட்டத்தில், முதல்வராக யாரை தேர்வு செய்வது என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.