India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் மாதத்துடன் 2023 – 24 நிதியாண்டு நிறைவடைந்த நிலையில், 4ஆவது காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதில், பெரும்பாலான நிறுவனங்கள் ஈவுத்தொகையை (Dividend) அறிவித்துள்ளன. குறிப்பாக இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈவுத்தொகையை அறிவித்துள்ளன. இதனால், வரும் நாள்களில் முதலீட்டளர்களின் வங்கிக் கணக்கில் பண மழைதான்.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், நீண்ட நேர சூரிய வெளிப்பாட்டினால் குழந்தைகள், பெரியவர்கள், வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, தலைவலி, இதய துடிப்பு அதிகரிப்பு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய, உடல் வெப்பநிலையை உடனே குறைக்க வேண்டும்.
தாம்பரத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி-யிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் . பிடிப்பட்ட ₹4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். ஆனால், இதற்கு நயினார் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
CSK – SRH அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. SRH அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால், அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களுக்கு மேல் குவித்தால், CSK-க்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். ஆனால், சேப்பாக்கம் மைதானம் CSK அணிக்கு சாதமாக இருக்கிறது. இதனால், பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் போதும், எளிதில் வெற்றிபெற முடியும்.
மத்திய அரசின் NCS இணையதளம் வாயிலாக வேலைத் தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 1.09 கோடி பணியிடங்களுக்கு 87 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2022 – 23 நிதியாண்டில் 34 லட்சமாக இருந்த வேலை வாய்ப்பு, 214% உயர்ந்து கடந்த நிதியாண்டில் 1.09 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் வேலைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 53% மட்டுமே உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பர்வானி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 75 பேரில், 5 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி கர்நாடகா அரசியலை புரட்டிப் போட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்
தைரியம் இருந்தால் வாரணாசியில் போட்டியிடுங்கள் என ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி வயநாட்டிலும், அமேதியிலும் நிச்சயம் தோற்பார் என்றார். தன்னை எதிர்த்து ராகுல் வடக்கு மும்பையிலும் போட்டியிடலாம் எனக் கூறிய அவர், 4 – 5 இடங்களில் நின்றால் தற்செயலாக ஒன்றில் வெற்றி பெறலாம் எனக் கிண்டல் செய்தார்.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகப் போட்டி சம்பளத்தில் 10%-ஐ அபராதமாகச் செலுத்துமாறு MI அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில், அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை அடுத்து, நடத்தை விதி பிரிவு 2.2இன் கீழ், லெவல் 1 குற்றத்திற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான அபராதத்தைக் கட்ட அவர், ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் 14 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் வாக்களித்தனர். இதனிடையே, நடிகைகள் ரம்யா, ரஷ்மிகா மந்தானா ஆகியோரும் வாக்களிக்க வருவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிக்க வராத நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை டேக் செய்து காரணத்தைக் கேட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.