India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தலில் தலைவர்கள் தோல்வியுற்றால் சில தொண்டர்கள் மொட்டை அடிப்பதாக சவால் விடுவார்கள். இதற்கு ஒருபடி மேலே சென்று, விரலை வெட்டிக் கொள்பவர்களும் உண்டு. ஆனால், மகாராஷ்டிராவின் பீட் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோல்வி அடைந்ததற்காக 2 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சரத்பவாரின் என்சிபி வேட்பாளர் பஜ்ரங் மனோகர் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, அவருக்கு வலது, இடது கைகளாக செயல்பட்ட ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகினர். இதனால், தற்போது தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ், “ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற கோரிக்கையை தீவிரமாக முன் வைக்க தொடங்கியிருக்கிறார்.

மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக நட்டா பதவியேற்றுள்ளார். இதனால், பாஜக தேசிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. இந்நிலையில், புதிய தலைவருக்கான பட்டியலில் ஸ்மிருதி இரானி, அனுராக் தாகூர், வினோத் தவ்டே, கே லக்ஷ்மண், சுனில் பன்சால் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அரைமணி நேரமாக பெய்து வரும் மழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சி, சேலம், வேலூர், தி.மலை, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 14ஆம் தேதி தொடங்கும் எனவும், பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அடிப்படை ஊதியம் & அலுவலக அலவன்ஸ் உள்பட மாதம் ₹1.60 லட்சம். * தொலைபேசிக்கு ஆண்டுக்கு ₹1.5 லட்சம். * வருடத்திற்கு 34 இலவச விமான டிக்கெட்டுகள். * ரயில்களில் தடையற்ற முதல் ஏசி வகுப்பு பயணம். * இலவச வீடு. * ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம். * நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது டிஏ ₹2000. * இலவச CGHS சிகிச்சை. * முன்னாள் MPகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம்

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இணையவாசிகளுக்கு படக்குழு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், படத்தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட எச்சரிக்கை நோட்டீஸை, தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளது. அதன்படி, டிரெய்லரின் எந்த ஒரு காட்சி, வீடியோக்களையும் பகிர்ந்தால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோ வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு திரும்பிய நிலையில், மே 31ஆம் தேதி கைதானார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். இன்றுடன் காவல் முடிவடையும் நிலையில், நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை ஜூன் 24 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 72 பேர் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற தகவல், இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, இலாகா விவரம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

INDIA கூட்டணி 235க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசால் அவ்வளவு எளிதாக மசோதாவையும் நிறைவேற்றிவிட முடியாது. அதேபோல், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்பிக்களின் குரல் வலுவாக இருக்கும். இதை எல்லாம் சமாளிக்கும் வகையில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் புலமை பெற்ற புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி பாஜக திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.