News April 28, 2024

அடுத்தடுத்து இரண்டு பேர் அரை சதம்

image

RCB அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களான சாஹா (5), கில் (16) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து கூட்டணி அமைத்த ஷாருக் கான், சாய் சுதர்சன் RCBயின் பவுலிங்கை நாலாப்பக்கமும் சிதறடித்தனர். ஷாருக் கான் 58 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் 74* ரன்களுடன் ஆடி வருகிறார்.

News April 28, 2024

வெயிலால் பெட்ரோல் டேங்க் வெடிக்குமா?

image

கோடை காலத்தில் வாகனங்களில் பெட்ரோல் டேங்கை முழுவதும் நிரப்பினால் வெடிக்க வாய்ப்புள்ளதாகச் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. வெப்பம் அதிகரிக்கும்போது பெட்ரோலுக்கு விரிவடையும் தன்மை இருப்பதால், டேங்க் வெடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதை மறுத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், காலநிலைக்கு ஏற்பப் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்களின் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளன.

News April 28, 2024

பாகிஸ்தானியர்கள் 14 பேர் போதைப்பொருளுடன் கைது

image

குஜராத்தில் ₹600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களுடன் பாகிஸ்தானியர் 14 பேர் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்பந்தர் கடல் பகுதியில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினருடன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது படகில் கடத்தி வரப்பட்ட 86 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன், அதைக் கடத்தி வந்த 14 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

டி20 உலகக் கோப்பை அணி நாளை மறுநாள் அறிவிப்பு?

image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட பட்டியலை மே 1ஆம் தேதிக்குள் அளிக்க ஐசிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அணித் தேர்வு தொடர்பாக இன்று ரோஹித் ஷர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் ஆலோசனை நடத்தவுள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 28, 2024

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் தகாத முறையில் இருப்பது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தற்போது அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் ஜெர்மன் நாட்டிற்கு சென்று தலைமறைவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

News April 28, 2024

₹500 முதல் ₹1000 வரை அபராதம்

image

தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர், சின்னம் ஒட்டியிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் ₹500 முதல் ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. மே 1ஆம் தேதி வரை வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டுகளை மாற்றிக்கொள்ளக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

ரத்னம் படத்திற்கு போதிய வரவேற்பில்லை

image

இயக்குநர் ஹரியுடன் விஷால் மூன்றாவது முறையாகக் கூட்டணியமைத்த ‘ரத்னம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஹரியின் முந்தையப் படங்களின் சாயல் இப்படத்தில் எழுந்ததால் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ரத்னம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாள்களில் வெறும் ₹5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 28, 2024

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர் கைது

image

பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜஸ்தான் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று வேறு ஒரு விவகாரத்திற்காக காவல் நிலையம் சென்ற அவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகுந்து அமைதியைக் குலைத்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

News April 28, 2024

பாக்., பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் இந்திய அணி 2011 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வென்றது. மேலும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

News April 28, 2024

மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்

image

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 1ஆம் தேதி வழக்கத்தை விடக் கூடுதலாக அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!