News June 10, 2024

இயக்குநர் திருச்செல்வம் மகளுக்கு திருமணம்

image

சின்னத்திரையின் பிரபல இயக்குநர் திருச்செல்வத்தின் மகள் பிரியவர்ஷினியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில், இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில், ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக, திருச்செல்வம் இயக்கி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர், சமீபத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

News June 10, 2024

விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: திமுகவில் யாருக்கு சீட்?

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக, அதிமுக நேரடியாக களமிறங்குவதாக அறிவித்துள்ளன. இதில், திமுக சார்பில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா மற்றும் மறைந்த MLA புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

News June 10, 2024

தூங்கும் முன் இதை சாப்பிடாதீர்கள்

image

இரவில் தூங்கச் செல்லும் முன்பாக புகைப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்காக அமையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரம் காஃபி குடித்துவிட்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர். மேலும், சிலர் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் ஆகியவற்றை இரவில் உண்பதுண்டு. இரவில் தூங்கச் செல்லும் முன் வாழை, கொய்யா தவிர்த்து பிற பழங்களை தவிர்க்க வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News June 10, 2024

நாடாளுமன்றத்தில் திமுக MP-க்களின் பொறுப்பு

image

*கனிமொழி – நாடாளுமன்ற குழுத் தலைவர்
*டி.ஆர்.பாலு – மக்களவை குழுத் தலைவர்
*தயாநிதி மாறன் – மக்களவை குழு துணைத் தலைவர்
*ஆ.ராசா – மக்களவை கொறடா
*திருச்சி சிவா – மாநிலங்களவை குழுத் தலைவர்
*மு.சண்முகம் – மாநிலங்களவை குழு துணைத் தலைவர்
*பி.வில்சன் – மாநிலங்களவை கொறடா
*ஜெகத்ரட்சகன் – மக்களவை, மாநிலங்களவை பொருளாளர்

News June 10, 2024

நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் வேகம் எடுக்குமா?

image

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம், கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். தற்போது மோடி 3.0விலும் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக தொடர்வதால் இந்த அறிவிப்புகள் வேகம் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News June 10, 2024

தமிழகத்திற்கு பிரச்னையாக மாறப்போகும் இணையமைச்சர்

image

தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி பிரச்னை இன்னும் தீராத நிலையில், அந்தப் பிரச்னையைக் கையாளும் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகாவின் சோமன்னாவை இணையமைச்சராக மோடி அரசு நியமித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. முழு அதிகாரம் இல்லாத இணையமைச்சர் பதவிதான் என்றாலும், காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைந்தபட்ச ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளதால், உடனடியாக அவரது இலாகாவை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News June 10, 2024

தமிழகத்திற்கு ₹5700 கோடி ஒதுக்கீடு

image

தமிழகத்திற்கு வரி பகிர்வாக ₹5,700.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ₹1.39 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதிகபட்சமாக உ.பி., மாநிலத்திற்கு ₹25,069.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிஹாருக்கு ₹14,056 மத்திய பிரதேசத்திற்கு ₹10,970 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

News June 10, 2024

சிக்கிம் முதல்வராக பதவியேற்றார் பிரேம் சிங்

image

சமீபத்தில் நடந்த சிக்கிம் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று முதல்வராக பொறுப்பேற்றார். தலைநகர் காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

News June 10, 2024

வாட்ஸ் அப் சேனல் தொடங்கிய தமிழக அரசு

image

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் TNDIPR, Govt of Tamil Nadu’ என்ற பெயரில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>லிங்கை <<>>கிளிக் செய்து, அங்குள்ள QR CODA-ஐ ஸ்கேன் செய்யுங்கள். இதன் மூலம், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உங்களுக்கு தெரியவரும்.

News June 10, 2024

T20 WC: வங்கதேசத்திற்கு 114 ரன்கள் இலக்கு

image

T20 உலகக் கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்து வந்தாலும், பொறுமையாக ஆடிய க்ளாஸான் 46, மில்லர் 29 ரன்கள் குவித்து அணியை மீட்டனர். வங்கதேசம் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தன்சிம் ஹசன் ஷகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

error: Content is protected !!