India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மணிப்பூர் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் அமைதியாகவே இருந்து வந்ததாக தெரிவித்த அவர், தற்போது திடீரென மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அங்கே தலை தூக்கியுள்ளதாக விமர்சித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

➤ 1805 – அமெரிக்காவின் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
➤ 1837 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
➤1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
➤1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் உயிரிழந்தனர்.
➤1991 – ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம் என தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். கட்சியின் 25ஆவது நிறுவன தினத்தில் அவர் பேசும்போது, நாடாளுமன்ற தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாக இல்லை என்று கூறிய அவர், மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டது என்றார். மோடி அரசு, அவர்கள் எண்ணத்திற்கு இனி அரசை நடத்த முடியாது எனவும் கூறினார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், ஹஜிப்பூர் தொகுதி எம்.பியுமான சிராக் பாஸ்வானுக்கு உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிராக்கின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவின் 2014 மற்றும் 2019 ஆட்சி காலத்தில் இதே துறையில் அமைச்சராக பணியாற்றினார். தந்தை அமைச்சராக இருந்த துறையே, சிராக் பாஸ்வானுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக 2020இல் மறைந்தார்.

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
◾விளக்கம்: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

மோடி 3.0 அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடுக்கு அப்பால், மோடி 2.0 அமைச்சரவை பெரும் மாற்றமின்றி தொடர்ந்துள்ளது. குறிப்பாக மோடி 2.0 அமைச்சரவையில் இருந்த 39 பேர் மீண்டும் அமைச்சராக தொடர்கிறார்கள். இதனால், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பாஜக எம்பிக்கள் கணிசமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு எதிராக எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடும் திறன் பாக்., அணியிடம் இல்லை என்றார். பாகிஸ்தான் இன்னும் WC தொடரில் இருந்து வெளியேறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைந்த நிலையில், ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 2016 மற்றும் 2021 தேர்தலில் திமுக வென்ற நிலையில், 2019 இடைத்தேர்தலில் அதிமுக வென்றது. விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், தொகுதியில் செல்வாக்கு செலுத்தும் பாமகவின் நிலைபாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக வேட்பாளரை நிறுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன்று (ஜூன் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

●மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
●ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு.
●உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
●தைராய்டு பிரச்னையை தீர்க்க உதவுகிறது.
●செரிமான குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுகிறது.
Sorry, no posts matched your criteria.