News June 11, 2024

உணவில் கறிவேப்பிலையை தவிர்க்காதீர்கள்

image

கறிவேப்பிலை சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாக இருப்பதோடு மட்டுமின்றி, செரிமானம் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகளும் குணமாகும். இதனுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும், கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் ரத்த சோகை பிரச்னைகளை குறைக்கும். இனி கறிவேப்பிலையை தூக்கி எறியாமல், அதை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

News June 11, 2024

19இல் 12 தொகுதியில் பாஜகவை வீழ்த்திய அதிமுக

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக நேரடியாக மோதிய தொகுதிகளில் அதிமுக அதிக இடங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் 19 இடங்களில் நேரடியாக மோதியுள்ளன. இதில், நாமக்கல், கரூர், சிதம்பரம், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். குமரி, நெல்லை, வேலூர், கோவை, தென் சென்னை உள்ளிட்ட 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர்.

News June 11, 2024

மனதிற்கு நெருக்கமாக உணர்கிறேன்: ரகுல் ப்ரீத் சிங்

image

தனது சினிமா வாழ்க்கையில் இந்தியன்-2 படம் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட இதில் சிறப்பாக நடித்ததாக தெரிவித்த அவர், தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக இந்த படத்தில் வருவதாக கூறியுள்ளார். இந்தியன்-2 படத்திற்காக பயணம் செய்த நாள்கள் மற்றும் நடித்த அனுபவங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

ராகுல் காந்தி நாளை வயநாடு பயணம்

image

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ராகுல் காந்தி நாளை அங்கு செல்கிறார். வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற அவர், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில், எம்பியாக தொடர ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News June 11, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஜூன்- 11 | வைகாசி- 29
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 04:30 PM – 05:30 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 PM, 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ திதி : பஞ்சமி

News June 11, 2024

மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்படுகிறது: பிரியங்கா

image

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் என்பது தொடர் கதையாக உள்ளதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். தேர்வு நடத்தும் அமைப்புக்கு பொறுப்பு என்பதே இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இளம் மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார். மாணவர்களின் கடின உழைப்பை வீணடிக்கும் இத்தகைய அநீதிகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News June 11, 2024

நீட் தேர்வை அனுமதிக்க முடியாது: ஜவாஹிருல்லா

image

மாணவர்களின் மருத்துவக் கனவை குலைக்கும் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறியுள்ளார். பல லட்சங்கள் கொடுத்து பயிற்சி நிலையம் சென்றால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றால் அது கல்வியா? வர்த்தகமா? என்ற கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வை தமிழ்நாட்டு மக்கள் ஏற்று மாட்டார்கள் என்றார். தேசிய தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

பாமகவின் மாம்பழம் சின்னம் பறிபோகுமா?

image

தொடர் தோல்விகளில் தவிக்கும் பாமகவுக்கு, மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிபோன நிலையில், தனது மாம்பழம் சின்னத்தை காப்பாற்றிக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 1% வாக்குகளை வாங்கினால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு சின்னத்தை கட்சிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அந்த வகையில், 4% வாக்குகள் பெற்ற பாமக, மாம்பழம் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

News June 11, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும்
➤ இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான்
➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.
➤ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.

News June 11, 2024

கூட்டணி ஆட்சியில் சாதிப்பாரா மோடி?

image

3ஆவது முறையாக பிரதமராகியுள்ள மோடி, அதில் முழுமையான வெற்றி அடைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1999இல் 20க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒன்றிணைத்து வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தியது. அதன் பிறகு, 2014 மற்றும் 2019 தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்தியது. ஆனால், தற்போது கூட்டணி கட்சிகளை அனுசரித்து 5 ஆண்டு காலத்தை மோடி முடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!