News June 11, 2024

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்பப்பதிவில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன்பின், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான தேதியை இன்று (11.06.2024) வரை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News June 11, 2024

296 ரயில்களின் எண்களும் பழையபடி மாற்றம்

image

தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 8 மலை ரயில் உள்பட 296 ரயில்களின் எண்களும் கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டு, 0 என்று தொடங்கும் வகையில் எண்கள் மாற்றப்பட்டன. இதையடுத்து, அந்த எண்களிலேயே ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் ஜூலை 1 முதல் பழையபடி 5,6,7 என்று தொடங்கும் வகையில் ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News June 11, 2024

ஒடிஷா புதிய முதல்வர் யார்? இன்று தெரியும்

image

ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில், ஒடிஷா முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார். அந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு புதிய அரசு பதவியேற்கவுள்ளது.

News June 11, 2024

சட்டப்பேரவை நடைபெறும் தேதி மாற வாய்ப்பு

image

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் கூட்டத் தொடரின் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கூட்டத் தொடர் நடைபெற்றால், கட்சியினரால் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் உறுப்பினர்கள் தேதியை மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளனர்.

News June 11, 2024

“காஷ்மீரில் 50 பேரை தீவிரவாதிகள் கொன்றிருப்பர்”

image

காஷ்மீரின் ரிசி பகுதியில் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் பலியானதுடன், 41 பேர் காயமடைந்தனர். இதில் உயிர் தப்பிய பயணி அளித்த பேட்டியில், பள்ளத்தில் பேருந்து கவிழவில்லை எனில் 50 பேரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்றிருப்பர் என்றும், அதேபோல் பேருந்து பாறை, மர இடுக்கில் சிக்கிக் கொண்டதால் 41 பேரும் காயத்துடன் தப்பியதாகவும் கூறியுள்ளார்.

News June 11, 2024

தமிழகத்தில் குழந்தை விற்பனை

image

கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பிஹாரில் வறுமையில் இருப்போரிடம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதாகக் கூறி வாங்கிவந்து, தமிழகத்தில் ₹5 லட்சம் வரை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

News June 11, 2024

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு

image

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி GR.சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம் வந்துவிடும் என்று விளக்க போலீசாருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்

News June 11, 2024

மோடி 3.0 அரசில் இலாகா மாறிய அமைச்சர்கள் (2/2)

image

3) ஜோதிராதித்ய சிந்தியா – தகவல் தொடர்பு, வடகிழக்கு விவகாரம் (விமானப் போக்குவரத்து, உருக்குத் துறை) 4) கஜேந்திர சிங் செகாவத் – கலாசாரம், சுற்றுலாத் துறை (ஜல்சக்தி) 5) கிரண் ரிஜிஜு – நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மைத் துறை (புவி அறிவியல்) 6) மன்சுக் மாண்டவியா – தொழிலாளர், இளைஞர் நலன், விளையாட்டு (சுகாதாரம், ரசாயனம், உரம் 7) கிஷண் ரெட்டி – நிலக்கரி, சுரங்கம் (கலாசாரம்).

News June 11, 2024

மோடி 3.0 அரசில் இலாகா மாறிய அமைச்சர்கள் (1/2)

image

பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து 3ஆவது முறையாக மத்தியில் அமைந்துள்ள அமைச்சரவையில், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 7 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. 1) பிரகலாத் ஜோஷி – உணவு, நுகர்வோர் விவகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (முன்பு, நிலக்கரி சுரங்கம், நாடாளுமன்ற விவகாரம்) 2) கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை (முன்பு, கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்)

News June 11, 2024

இபிஎஸ் அணியில் இணையும் கு.ப.கிருஷ்ணன்?

image

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர் இபிஎஸ் அணியில் இணைய இருப்பதால் பிரார்த்தனை முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

error: Content is protected !!