India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் 2ஆம், 3ஆம் ஆண்டு மாணவர்களும் கடன் பெறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த ஆலோசனையில், முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர். பழைய திட்டங்களின் நிலை மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, பாஜக இடையே போட்டி எழுந்துள்ளது. தமக்கு செல்வாக்கு அதிகமுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாமக நினைக்கிறது. அதேசமயம், பாஜகவும் போட்டியிட விரும்புவதால் விவாதம் எழுந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹53,160க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,630க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹15 உயர்ந்து ₹6,645க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹1.20 குறைந்துள்ளது. நேற்று ₹96.20க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ₹95க்கு விற்பனையாகிறது.

உலக நாடுகள் பலவும் ராணுவத்துக்காக பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகையை செலவிடுகின்றன. ஆனால், 9 நாடுகள் மட்டும் சொந்தமாக ராணுவ அமைப்பை கட்டமைக்கவில்லை. பிற நாடுகளுடன் செய்த ஒப்பந்தம், காவல்துறைக்கு அளித்த அதிகாரத்தால் அந்நாடுகள் ராணுவத்தை கட்டமைக்கவில்லை. *ஐஸ்லாந்து *மொரிசீயஸ் *கோஸ்டாரிகா *வாடிகன் சிட்டி *லிஸ்டென்ஸ்டின் *அன்டோரா *செயின்ட் லூசியா *டொமினிகா *சாலமன் தீவுகளே அந்நாடுகள் ஆகும்.

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். முன்னதாக, புகார் கொடுத்தும் சாக்கடையை சுத்தம் செய்யவில்லை என கூறப்பட்ட நிலையில், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உலகக் கோப்பை டி20 போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஓமன் அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக WC தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை, பாக்., அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகத்திலும் 2வது பாக படம் எடுப்பது வாடிக்கையாகியுள்ளது. இதுபோல 2வது பாகம் எடுக்கும் பழக்கம் 1916ல் தொடங்கியது. 1916இல் அமெரிக்காவில் கருப்பு வெள்ளை நிறத்தில் The Fall of a Nation என்ற ஊமைப்படம் வெளியானது. அப்படம், The Birth of a Nation என்ற படத்தின் 2ஆவது பாகமாகும். ₹25 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தை தாமஸ் டிக்சன் ஜுனியர் இயக்கியிருந்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில், இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.