India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜப்பானின் கோபில் நகரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்க பதக்கம் வென்றிருந்தார். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ₹75 லட்சத்துக்கான காசோலையை தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முடிவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ப.சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் நிர்வாக மாற்றத்தில் திமுக ஈடுபட்டுள்ளது.

மேலவை எனப்படும் மாநிலங்களவையில் சிவப்பு கம்பள விரிப்புகள் விரிக்கப்பட்டு இருக்கும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில், சிவப்பு நிற விரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களவை சிவப்பு நிற பின்னணியோடு காணப்படும். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடர் கூட்டப்பட்டால், அனைத்து உறுப்பினர்களும் மைய மண்டபத்தில் கூடி விவாதிப்பார்கள்.

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று 2 அவைகள் உள்ளன. இதில் மக்களவை இருக்கைகள், தரைவிரிப்புகள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை இருக்கைகள், விரிப்புகள் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதற்கான காரணம் தெரிந்து கொள்வோம். மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆதலால், பச்சை புற்கள், விவசாயத்துடன் தொடர்புடைய பச்சை நிற இருக்கைகள், விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

T20 உலகக் கோப்பையில் நேற்று வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் எடுத்து வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா, WCல் குறைந்த ரன்கள் (114) எடுத்தும் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதே சாதனையாக இருந்தது. மேலும், T20யில் வங்க தேசத்திற்கு எதிராக அதிக வெற்றிகள் (9) பெற்ற 2வது அணி என்ற சாதனையையும் தெ.ஆ., படைத்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் இருப்பதாக நாடு முழுவதும் சர்ச்சை வெடித்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை சாஸ்திரி பவன் முன் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அப்போது, கைது செய்ய விடாமல் அவர்கள் போராடியதால், போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி, வேனில் ஏற்றிச்சென்றனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. அந்த பதவி வகிப்போர், எம்பிக்களுக்கு இருக்கை மற்றும் அறை ஒதுக்கீடு, அலுவல் கோப்பு விவகாரம், மக்களவை அலுவல், நிலைக்குழுக்கள் அமைத்தலில் முக்கிய பங்கு வகிப்பர். சிபிஐ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றின் தலைவரை தேர்வு செய்யும் குழுவிலும் அங்கம் வகிப்பார்.

நீட் இளங்கலை 2024 தேர்வை ரத்து செய்யக்கோரியும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் தாக்கலான மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதின் அமானுல்லா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேடு புகார்கள், நீட் தேர்வின் புனிதத்தை பாதிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பதிலளிக்க தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி, தேர்வு முடிவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், கவுன்சிலிங்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் நீட் தேர்வு குறித்த புகார் குறித்து விளக்கமளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தது.

கர்நாடகாவை சேர்ந்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடா குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட ரேணுகா, மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த வழக்கில் தர்ஷனுடன் சேர்த்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.