India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்தார். இதையடுத்து, விருதுநகரில் ராதிகாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது. இந்தத் தேர்தலில் ராதிகா வெற்றி பெறுவார் என சரத்குமார் நம்பியநிலையில், தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, பாஜகவில் இருந்து பிரிந்து மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தலாமா என சரத்குமார் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இன்று காலை சாக்கடையிலிருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ₹30 லட்சமும், மற்ற இருவரின் குடும்பத்திற்கு தலா ₹20 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. மேலும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் தவறு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் +2 மற்றும் பட்டயப்படிப்பை முடித்த SC/ST மாணவர்களுக்கு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு பயிற்சிக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 – 27 வரை. பயிற்சி காலத்தில் மாதம் ₹1000 உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும். முழு விபரங்களுக்கு 0444-24615112 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியை சுட்டிக்காட்டி, தனது தலைமையில் செயல்பட முன்வரும்படி சசிகலா அழைப்பு விடுத்திருந்தார். தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்தும் பேசியுள்ளார். ஆனால், தேர்தலில் வெளியே எட்டி கூட பார்க்காத சசிகலா, எப்படி அதிமுகவுக்கு தலைமை வகிப்பார்? எப்படி ஒருங்கிணைப்பார்? எனக்கூறி அவரது அழைப்பை நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் 21 எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வர் பதவி கேட்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 175 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. இருப்பினும், பவன் கல்யாண் துணை முதல்வர் பதவி கேட்பதால், கூட்டணிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, அதிமுக ஒன்றுபட வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த அறிக்கையில் இடம்பெற்ற வாசகமான, “இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம் என்ற வார்த்தைகள்” என்பது இபிஎஸ்ஸை மட்டம் தட்டும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இபிஎஸ்சை குத்திக் காட்டவே ஓபிஎஸ் அந்த அறிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

பாஜக மீதான அதிருப்தியால் தேர்தலில் அக்கட்சிக்கு RSS பணியாற்றவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத், பாஜக அரசின் ஆட்சியில் பல துறைகள் மேம்பட்டுள்ளதாகவும், பாஜகவின் பணிகளே அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர காரணமென்றும் பாராட்டினார். இதன்மூலம், பாஜகவுடன் RSSக்கு மோதல் போக்கு நிலவியதாக கூறப்பட்ட கருத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முகூர்த்த தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வைக் கண்டுள்ளது. நேற்று கிலோ ₹1300க்கு விற்பனையான பிச்சிப்பூ, இன்று ₹2000ஆகவும், கிலோ ₹400க்கு விற்க்கப்பட்ட மல்லிப்பூ, ₹750ஆகவும் விலை உயர்ந்துள்ளது. சில்லரை கடைகளில் விலை இதைவிட அதிகம் இருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு சரத்குமார் குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு, தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார் வரலட்சுமி.

பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் பதவியை இழந்தார். அந்தப் பதவியில் மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அண்மையில் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினையும், கட்சி மூத்த தலைவர்களையும் ஆவடி நாசர் சந்தித்துள்ளார். இதைவைத்து மீண்டும் அமைச்சராகும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.