India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலனை பெரிய அளவில் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர இறந்த பணியாளரின் மனைவிக்கு உத்தரவாத தொகையில் 60% மாதாந்திர ஓய்வூதியமாக உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. உத்தரவாத ஓய்வூதியத் தொகையில் நிதி குறைப்பாடு இருந்தால், அது மத்திய அரசின் பட்ஜெட்டில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அமெரிக்கா, இந்தியா என அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் , பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். இதனால், இன்று பாக், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 9ஆம் தேதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட 28 மத்திய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. இதில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வீட்டில் இருந்து வெளியே செல்வோர் குடையுடன் செல்லவும், வெளியே இருப்பவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், நடப்பு நிதியாண்டில் பல்வேறு வழிகளில் சுமார் ₹8,358.15 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு வங்கியின் நிர்வாக வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் வகையில், கடன் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வங்கிகள் நிதி திரட்டி வருகின்றன.

இத்தாலியில் ஜூன் 13 முதல் 15ஆம் தேதி வரை G7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில், 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடி பங்கேற்கவுள்ளார். ஜூன்13ஆம் தேதி மோடி இத்தாலி புறப்படவுள்ளதாகவும், அங்கு இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்ற பின் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரேஷன் அட்டை இல்லாதவர்கள், ஆதார், அடையாளச் சான்று, முகவரிச் சான்றாக சிலிண்டர் பில் கொடுத்து, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சமயத்தில் கடைசி 3 மாதங்களுக்குள் சிலிண்டர் வாங்கியிருக்க வேண்டும். மேலும், புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிய பின்னரே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

3ஆவது முறையாக பிரதமர் பதவியை வகிக்கும் மோடியிடம் இந்த நாடு, குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்ப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகவும், அதை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், மோடி மற்றும் அமித் ஷா அரசியலமைப்புக்கு முடிவு கட்ட நினைப்பதை மக்கள் புரிந்து கொண்டதாகவும், அதனால்தான் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி ஒற்றுமையாக செயல்பட்டதாக பாராட்டினார்.

பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள், நக்சலைட்டுகள் ஆகியோருக்கு எதிரான அரணாக தேசத்தை கட்டமைக்க உறுதி பூண்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமித் ஷா, உள்துறை அமைச்சராக 2ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.