India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜூன் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

➤ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு
➤ ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்து 49 பேர் பலி
➤ விமான விபத்தில் மலாவியின் துணை அதிபர் பலி
➤ மோடியை எதிர்த்து பிரியங்கா நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்: ராகுல்
➤ நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்: அமித் ஷா
➤‘மகாராஜா’ ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு

முருங்கையின் இலை, பூ, காய், வேர், பட்டை, பிசின் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டால் குணமாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். முருங்கைக்கீரை, சர்க்கரையை குறைக்கிறது. முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். முருங்கைப்பூ மலட்டுத் தன்மையை நீக்கும் என்கிறார்கள்

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியது, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட 3 வழக்குகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2 வழக்குகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுகளும், மற்றொரு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தகைய தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குழந்தை பெற்றுக் கொள்ள செல்வதற்கு முன் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குழந்தை பிறந்ததற்கு பின் தன் பெற்றோர் வீட்டிற்கு போய் விட்டால், கணவர் சரியாகச் சாப்பிட மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த பெண் இப்படி செய்துள்ளார்.

*கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். *கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், 25% மேல் லிமிட்டை தாண்ட கூடாது. *கிரெடிட் கார்டு பில்லை, உரிய தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். *தேவையில்லாத பொருட்களை EMI மூலம் வாங்கக் கூடாது. *ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். *சம்பளத்தின் முதல் செலவு, சேமிப்பாக இருக்க வேண்டும். *ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும்.

ஒடிஷாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் சரண் மாஜி (52), ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய சரஸ்வதி சிசு வித்யா மந்திர் பள்ளியின் குருவாக பயணத்தை தொடங்கினார். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பாஜகவை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றினார். அரசியல் ரீதியாக முதலில் கிராம தலைவராக பயணத்தை தொடங்கி, ஒடிஷா பழங்குடியினரின் வலிமையான முகமாக மாறினார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், புகாரளித்த பெண்ணுக்கும், தனக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணை நடைபெற்ற போது, அவர் பொய் கூறியது தெரியவரவே, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீரின் ரேசியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, ‘All eye on Reasi’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ‘All eye on Reasi’ ஹேஷ்டேக்கிற்கு இன்ஸ்டாகிராம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், ‘Boycott Instagram’ என்ற ஹேஷ்டேக்கை பலர் ட்ரெண்டிங் செய்து, இன்ஸ்டா செயலியை Uninstall செய்து வருகின்றனர்.

* மேஷம் – நஷ்டம் ஏற்படும், *ரிஷபம் – சிக்கல் வரும், *மிதுனம் – நன்மை உண்டாகும், *கடகம் – இனிமையான நாளாக அமையும், *சிம்மம் – தோல்வி ஏற்படும், *கன்னி – துன்பம் ஏற்படும், *துலாம் – வெற்றி கிடைக்கும், *விருச்சிகம் – பணம் செலவாகும், *தனுசு -குடும்ப ஆதரவு கிடைக்கும், *மகரம் – பயம் ஏற்படும், *கும்பம் – கவலை கொள்ளவேண்டாம், *மீனம் – அதிக லாபம் கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.