News June 12, 2024

ஜூன் 12: வரலாற்றில் இன்று

image

➤ 1899 – அமெரிக்காவில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.
➤ 1902 – ஆஸ்ரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
➤1934 – பல்கேரியாவில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
➤2003 – “தமிழர் விடுதலை இயக்கம்” என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
➤ 2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

News June 12, 2024

மத்திய அரசு துரோகம் செய்கிறது: தயாநிதி மாறன்

image

வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்னையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக மத்திய அரசு ₹5700 கோடியும், உ.பிக்கு ₹25,069 கோடியும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

News June 12, 2024

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி

image

பிரதமர் மோடி, தனது வாரணாசி தொகுதிக்கு 18ஆம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். கடந்த 2019 பாஜக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

News June 12, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
◾விளக்கம்: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

News June 12, 2024

புதிய சாதனை படைத்த ரிஸ்வான்

image

டி20 உலகக் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்துள்ளார்.
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 52 பந்துகள்
டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) – 50 பந்துகள்
டெவன் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) – 49 பந்துகள்
டேவிட் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) – 49 பந்துகள்

News June 12, 2024

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக

image

விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் 5ஆவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021இல் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பாமகவுக்கு இத்தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 12, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News June 12, 2024

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: அம்பத்தி ராயுடு

image

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ஷிவம் தூபே இந்திய அணியில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடி வருவதாக தெரிவித்த அவர், ஷிவம் தூபேவை விட சிறந்த பேட்டிங் டெக்னிக்கைக் கொண்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இன்று இரவு, இந்திய அணி அமெரிக்காவுடன் மோத உள்ளது.

News June 12, 2024

அசைக்க முடியாத சக்தியாக பாஜக வளரும்: ராம.சீனிவாசன்

image

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக, 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவை நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கும் கட்சி எனக்கூறும் அதிமுக, 2 தொகுதிகளில் 4ஆவது இடத்துக்குச் சென்றதாக விமர்சித்தார். பாஜக தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக வரும் என்றார்.

News June 12, 2024

T20 WC: பாகிஸ்தான் அணி வெற்றி

image

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கனடா அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார்.

error: Content is protected !!