India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நமீபியா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 17 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ₹500இல் இருந்து ₹900ஆக உயர்ந்துள்ளது. கிலோ ₹80க்கு விற்ற பச்சை மிளகாய் ₹125ஆகவும், கிலோ ₹37க்கு விற்ற முருங்கைக்காய் ₹45ஆகவும், ₹120 விற்ற அவரைக்காய் ₹200ஆகவும் விற்பனையாகிறது. கோடை மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

இமாச்சல் அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான முகேஷ் அக்னி கோத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜகவின் ஆபரேசன் லோட்டஸ் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும், இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் வென்றதால் காங்கிரஸ் பலம் 38ஆக (மொத்தம் 68) அதிகரித்து விட்டதால் அரசுக்கு ஆபத்தில்லை என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி பகுதியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது அண்மையில் 2 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் பலியாகினர். 40 பேர் பலத்த காயத்துடன் தப்பினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவனின் புகைபடத்தை சாட்சிகள் தெரிவித்த தகவலின்படி வரைந்து வெளியிட்டுள்ள போலீஸ், தகவல் அளித்தால் ₹20 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.

இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்த அடா ஷர்மா, தனக்கு ‘எண்டோ மெட்ரியோசிஸ்’ என்ற அரிய வகை நோய் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்ததால், இந்த நோய் வந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த நோயின் காரணமாக கடும் இடுப்பு வலியினால் அவதிப்படுவதாகவும், நரக வேதனையை அனுபவிப்பதாகவும் அடா ஷர்மா தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையேயான சண்டையில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 2 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து அந்த 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு எடுத்து வரும் பணியை ரஷ்யாவில் உள்ள தூதரகம் மூலம் தொடங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு பணியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆந்திராவில் புதிதாக பதவியேற்கவுள்ள 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். அதில், TDP-க்கு 20 இடமும், ஜனசேனாவுக்கு 3 இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒரு பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் பவன் கல்யாண், நாரா லோகேஷ், நாடெண்ட்லா மனோகர், கோட்டிப்பட்டி ரவிக்குமார் போன்ற பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

என்டிஏ ஆட்சி தற்காலிகமானது தான் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாகேத் கோகலே கூறியுள்ளார். மே.வங்க மாநிலத்தை சேர்ந்த 3 பாஜக எம்பிக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், எப்போது வேண்டுமானாலும் பாஜகவின் எம்.பிக்களின் எண்ணிக்கை 240இல் இருந்து 237ஆக குறையும் என்றார். இந்நிலையில், பாஜக எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸுடன் எவ்வித தொடர்பிலும் இல்லை என அம்மாநில பாஜக விளக்கமளித்துள்ளது.

இந்திய ராணுவ புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள உபேந்திர திவேதி, 30ஆவது தலைமைத் தளபதி ஆவார். தற்போது, துணைத் தளபதியாக உள்ள அவர், இதற்கு முன்பு வடக்கு பிராந்திய படைப்பிரிவு, தரைப்படை உள்ளிட்ட முக்கிய படைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து நன்கு அனுபவம் கொண்ட அவர், ராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிந்த நிலையில், தேர்தல் காரணமாக இம்மாதம் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தது. இதன்படி, 30ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள உபேந்திர திவேதி, வரும் 30ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.