India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் நாட்டில் காவல்துறையினர் காக்கி உடை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், இதில் விதிவிலக்காக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, ஹவுரா நகரங்களில் மட்டும் போக்குவரத்து போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் வெள்ளை நிற உடையையே அணிகின்றனர். வெப்பம் அதிகமுள்ள பகுதிகள் என்பதால், அதன் தாக்கத்தை தவிர்க்க வெள்ளை உடையை அவர்கள் அணிவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆந்திராவின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான புதிய அரசில் தற்போது அவருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் வென்றது.

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், அவர் கதாநாயகனாக நடித்து வியாபார ரீதியாக வசூலை குவித்த கடைசி படம் என்றால், அது 2018ல் வெளிவந்த ‘96’ தான். அதன் பிறகு வெளியான சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சங்கத்தமிழன், லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட 10 படங்களும் வசூலை குவிக்கவில்லை. விடுதலையில் கதையின் நாயகன் சூரி என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மக்களவைத் தேர்தலில், 33.5% வாக்கு வாங்கிய திமுக, தற்போது 27% மட்டுமே பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, கூட்டணி பலம், பிளவுபட்ட அதிமுக என பலமாக இருந்தபோதிலும் திமுகவின் வாக்கு குறைந்திருக்கிறது. மின்கட்டணம் & வரி உயர்வு உள்ளிட்டவை காரணமாக அரசு மீதான மக்களின் அதிருப்தி மனநிலை, சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தால், திமுக பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஜூன் 20 முதல் 29 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 மணிக்குத் தொடங்கும் பேரவை, இந்தமுறை 9 மணிக்கே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் காரணமாக குறைந்த நாட்களே பேரவை நடத்தப்படுகிறது.

கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சம் காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோரின் எதிர்ப்பை மீறி, சீட்டை வாங்கிய அவர், போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, தன்னை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து களையெடுக்க அவர், காய் நகர்த்திவருவதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக எடியூரப்பா இன்று ஆஜராகக்கூறி சிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகாத நிலையில், சம்மனுக்கு எந்த வித பதிலும் அளிக்காததால், கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

1980இல் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஜி.ஆரின் அதிமுக, அடுத்துவந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றதை மறந்துவிட வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் சிபிஎம் கூட்டணிக்கு எதிராக மக்கள் செயல்பட்டதாக காங்கிரஸ் நினைக்க வேண்டாம் எனக் கூறிய அவர், அகங்காரம் கொள்ளாமல், பாஜக ஒரு தொகுதியில் எப்படி வென்றது என்பதைப்பற்றி சிந்தியுங்கள் என்றார்.

டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதேபோல், மீண்டும் மோத வேண்டுமெனில், கீழ்காண்பவை நடைபெற வேண்டும். குரூப் A பிரிவில் இந்தியா அல்லது பாகிஸ்தான் முதலாவதாகவோ அல்லது 2ஆவதாகவோ வந்து சூப்பர் 8க்கு முன்னேறி வென்றால், கயானாவில் நடக்கும் அரையிறுதியில் மோதலாம். இதற்கு, எஞ்சிய லீக்கில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்.

அரையிறுதியில் மோத வாய்ப்பு இல்லையேல், இறுதிப் போட்டியில் 2 அணிகளும் மோத வாய்ப்புள்ளது. இதற்கு க்ரூப் A பிரிவு அணியான அமெரிக்கா எஞ்சிய போட்டிகளில் தோற்க வேண்டும். சூப்பர் 8இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் 2 இடங்களைப் பெற வேண்டும். இது திட்டமிட்டபடி நடந்தால், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வேறு வேறு அணிகளுடன் அரையிறுதியில் மோதும். அப்போட்டிகளில் வென்றால் இறுதிப் போட்டியில் மோத முடியும்.
Sorry, no posts matched your criteria.