India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹால் தொகுதி எம்எல்ஏவாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்தார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, தாம் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். மக்களவை எம்பியாக மட்டும் தொடர அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.

கேரளாவின் திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம், அங்கு முதன்முதலாக பாஜக காலூன்றி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு சரிவு தான் காரணம் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கேரளாவில் பாஜக எப்படி ஒரு இடத்தை வென்றது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை வென்றது போல், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 200+ தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குகளின் அடிப்படையில் 221 சட்டமன்றத் தொகுதிகளில் INDIA கூட்டணி முன்னிலை வகித்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இடைத் தேர்தலை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா ஆபத்து முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் மூலம் அந்த காய்ச்சல் பரவும். அது H5N1, H7N9 என்று 2 வகைபடுத்தப்பட்டுள்ளது. வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் புரதத்தை வைத்து இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது. பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவுவது அரிதினும் அரிதாகும்.

பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த கோழி, வாத்து போன்றவற்றின் இறைச்சியை சரிவர சமைக்காமல் சாப்பிட்டாலோ, அதன் உடல்கள், கழிவுகளை மிதித்தாலோ தொட்டாலோ மனிதருக்கு வைரஸ் பரவும். முதலில் மேல் சுவாசக் குழாய், நுரையீரலை பாதிக்கும். பிறகு மூளை, மற்ற பகுதிகளுக்கும் பரவும். இதனால் காய்ச்சல், சோர்வு, இருமல், தசை வலி, தொண்டை வலி, வாந்தி, மூக்கில் நீர் வடிதல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை ஏற்படும்.

கோழிப்பண்ணைகளில் பணியாற்றுவோர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்போருக்கே பறவைக் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. கோழிப் பண்ணைகளில் பணியாற்றுவோர் எனில், கையுரை, முகக்கவசம் அணிந்து பணியாற்றலாம். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். காலணிகளை பராமரிக்க வேண்டும். பண்ணை அருகிலுள்ள பகுதிகளில் வசிப்போர், அக்கழிவுகள் வீட்டருகில் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வு பெற்று புதிய உச்சமான 23,420 (NIFTY) புள்ளிகளைத் தொட்டிருக்கின்றன. மத்தியில் நிலையான ஆட்சி அமைந்துள்ளதால், பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் இன்று புதிய உச்சமாக 76,968 புள்ளிகளில் வர்த்தகமானது. HDFC, ICICI, ரிலையன்ஸ் போன்ற பங்குகள் உயர்வைக் கண்டன. இதனால், முதலீட்டாளர்களின் மதிப்பு இன்று மட்டும் ₹2.88 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜகவால் ஜெயிக்க முடியும் என்று இந்து முன்னணி நிர்வாகி பேசியதற்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்றும் அதில் யாரும் கலவரம் செய்ய முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக கலவரம் செய்ய வேண்டும் என்று பேசிய உடையார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலி எம்பியாக தொடர்வதா அல்லது வயநாடு எம்பியாக தொடர்வதா என்பது குறித்து, மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், எந்த தொகுதி எம்பியாக தொடர்வது என்பதை முடிவு செய்வதில் தர்மசங்கடமான சூழல் நிலவுவதாகவும், மோடியைப் போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல என்பதால், மக்களிடம் கேட்டு முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

வார இறுதி நாள்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, சென்னையில் இருந்து 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வருகிற 14 முதல் 17ஆம் தேதி வரை, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.