India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சுனில், குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Cotton Corporation of India Ltd (CCI) நிறுவனத்தில் காலியாகவுள்ள 214 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி: B.Sc in Agriculture, http://B.Com, MBA, CA/CMA மற்றும் Post Graduate.தகுதியானவர்கள் இன்று முதல் 02.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு இந்த <

எத்தனை நாள்களுக்கு திமுகவை சார்ந்திப்பது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியிருந்தது விவாதப்பொருளானது. இது குறித்து பிபிசி செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் அல்லது கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கமில்லை என கூறினார்.

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் 3ஆவது முறையாக பொறுப்பேற்றதை அடுத்து, வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மே 31, 2019 அன்று அவர் முதல்முறையாக நிதியமைச்சராக பதவியேற்றபோது 39,700 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், தற்போது 77 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது. இந்த பின்னணியில், FY28-க்குள் சந்தை வளர்ச்சிப் பெற்று, ஒரு லட்சம் புள்ளிகளை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்யும் என அறிவித்துள்ளார். அதேபோல், இந்திய தூதரகத்தின் சார்பில் +965-65505246 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா? என, பிரதமர் மோடிக்கு காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவரை, பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு காங், அழுத்தம் தரத் தொடங்கியுள்ளது.

ஆதாரில் உள்ள தகவல்களை இலவசமாக திருத்தம் செய்யவும், புதுப்பிக்கவும் வரும் 14ஆம் தேதி வரை UIDAI அமைப்பு கால அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் 2 நாள்களே உள்ளன. அதன்பிறகு ஆதாரில் தகவல்களை புதுப்பிக்கவோ, திருத்தம் செய்யவோ கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். ஆதலால் இந்த இலவச சேவையை பயன்படுத்தி பயனடையும்படி நாட்டு மக்களை, UIDAI அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ வெளியாகவுள்ளது. இதனால், ஜூலை மாத வெளியீடு என அறிவிக்கப்பட்ட அருண் விஜய்யின் ‘வணங்கான்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு பெரிய படங்களுக்கு மத்தியில் ‘வணங்கான்’ படக்குழு ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மோகன் சரண் மஜி, ஒடிஷாவின் முதல்வராவார் என, தாங்கள் யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை என மோகன் மஜியின் மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அமைச்சரவையில் கணவருக்கு இடம் கிடைக்கும் என நினைத்து கொண்டிருந்ததாகவும், ஆனால், முதல்வராக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார். ஒடிஷா மக்களின் தேவைகளை அவர் நிச்சயம் பூர்த்தி செய்வார் எனவும் உறுதியளித்துள்ளார்.

இயந்திரமயமான இந்த காலத்தில் மனிதர்கள், புதுப்புது நோய்களால் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. பெரும்பாலான இந்த நோய்களுக்கு மன அழுத்தமே காரணமாகும். இதற்கான மருந்து நம்மிடமே உள்ளது. ஆம், சிரிப்புதான் அந்த மருந்து. நகைச்சுவையில் வாய் விட்டு சிரித்தாலே போதும். அதனால் உடலில் ஏற்படும் மகிழ்ச்சியான உணர்வு, மன அழுத்தத்தை போக்கி நோய்களில் இருந்து விடுபட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.