India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானமாக விளையாடி வந்தது. சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்தது.
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் முடிந்தது. ‘பிகில்’ படத்தின் மூலம் அறிமுகமான இந்திரஜாவுக்கு அவரின் உறவினரும், இயக்குனருமான கார்த்திக் என்பவருடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மதுரையில் இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜூன் மாதத்துக்கான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ரூ.300 தரிசன டிக்கெட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (மார்ச் 25) வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க 3 மாதத்துக்கு முன்பே, டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது.
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியும் முயல்கிறது. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அஜித் பவார் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல்லில் இன்று நடைபெற்று வரும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிவரும் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் 128/2 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் 24, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு 58, ரியான் பராக் 32 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ராஜஸ்தான் எவ்வளவு ரன்கள் அடிக்கும் என நினைக்கிறீர்கள்?
2019ஆம் ஆண்டு செங்கல்லை வைத்து பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் பெருவெற்றி பெற்றது. அதன்பின், 2021ஆம் ஆண்டிலும் உதயநிதி செங்கல் பிரசாரம் செய்தார். திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்த வெற்றிகளுக்கு உதயநிதியின் பிரசாரம் கை கொடுத்ததாக திமுகவினர் சொல்வதுண்டு. அந்த வரிசையில் இன்று பெரியகுளத்தில் செங்கலுடன் பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த வார இறுதியான 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான ‘புனித வெள்ளி’ வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால், அதனுடன் சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இந்த நாள்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் மக்கள் நெருக்கடியுடன் காணப்படும். உங்களது பயணங்களை முன்கூட்டியே முறையாக திட்டமிடுங்கள்.
அர்ஜுனன் ஜூனியர் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ஜீனி’ (Genie) என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி, கீர்த்தி ஷெட்டி, வாமிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போலி ஆவணம் மூலம் 21 லட்சம் சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதை மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அந்த ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 21.08 லட்சம் சிம்கார்டு இணைப்புகளை ஆவணங்களுடன் மறுஒப்பீடு செய்யும்படியும், இதில் போலி என்பது உறுதியானால் இணைப்பை துண்டிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் குரூப் விவரங்கள் வெளியாகியுள்ளது. குரூப் A-இல், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், குரூப் B-இல் சென்னை, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். போட்டிகளை குறைக்கவே இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.