India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீண்டும் மோடி வேண்டும் என்கிறார்கள்; எதற்காக? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு அவர் ஒரு நன்மையையாவது செய்திருக்கிறாரா? என புதக தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ‘திமுக கொடுத்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டங்களுக்கு இப்போது எங்கே?’ என வினவியுள்ளார்.
இன்று (மார்ச் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் – அண்ணாமலை
*பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
*SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
*மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.
*5ஜி சேவை கட்டணத்தை 5% முதல் 10% வரை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
‘விஜய் டிவி புகழ்’ நடிக்கும் புதிய படத்திற்கு ‘டைமண்ட் தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜோஜின் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டைமண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அபிஷேக் இசையமைத்து வருகிறார். மேலும், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் GT அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த GT அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய MI அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பந்துவீச்சாளர்கள் ரஷித், ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீச, மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்தியது.
இரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், “போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். அது தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கும்”எனக்கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார். இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் கங்கனா, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அவர், “பாஜகவுக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. எனது பிறந்த இடமான மண்டி வேட்பாளராக அறிவித்துள்ளனர். பாஜகவில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துக் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 24) முதல் மார்ச் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதால்தான் நாம் சனி பகவானை நீதி தேவன் என்று அழைக்கிறோம். ஆனால், அவருக்கும் சில ராசிகளின் மீது கரிசனப் பார்வை உண்டு. ஏழரை சனியின் போது கூட அந்த ராசிகளை சனி துன்பப்படுத்த மாட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேஷம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள்தான் அவை. ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட குறைந்த கஷ்டங்களை அனுபவிப்பவர் இவர்கள்.
‘ரமணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரயில் நிலையத்தில், தற்போது ‘SK23’ படப்பிடிப்பை நடத்தி வருவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது ‘ரமணா’ படத்தில் இடம்பெற்ற இடத்திற்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்திருக்கிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது. #MissYouCaptain” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.