News June 13, 2024

T20 WCயில் இருந்து வெளியேறிய இரண்டாவது அணி

image

T20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ‘B’ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா, நமீபியா அணிகள் மோதின. இப்போட்டியில் தோல்வியடைந்த நமீபியா, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து, நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நமீபியா 1 வெற்றி மட்டுமே பெற்று ‘B’ பிரிவு பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. முன்னதாக ‘B’ பிரிவில் இடம்பெற்ற ஓமன் அணியும் வெளியேறியது.

News June 13, 2024

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற பிரேம்ஜி

image

பிரேம்ஜி, இந்து ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தம்பி கங்கை அமரனின் இளையமகன் பிரேம்ஜியின் திருமணத்துக்கு இளையராஜா வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இளையராஜா குடும்பத்திலிருந்து ஏன் ஒருவர் கூட வரவில்லை என்கிற கேள்விகளும் எழுந்தன. இந்நிலையில், இளையராஜாவிடம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து வாழ்த்து பெற்ற புகைப்படம் ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது.

News June 13, 2024

குவைத் தீ விபத்து: பலியான தமிழர்கள் எண்ணிக்கை 7ஆனது

image

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட விபத்தில், தமிழகத்தை சேர்ந்த வீராசாமி, முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர், ராமு ஆகியோர் உயிரிழந்தனர். குவைத்தில் உதவி தேவைப்படுவோர் +91 1800 309 3793, 80690 09900, 80690 09901 என்ற எண்களில் அழைக்கலாம்.

News June 13, 2024

குவைத் தீ விபத்து: நடிகர் விஜய் இரங்கல்

image

குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் தமிழ்நாடு & கேரளாவைச் சேர்ந்த பலர் உயிரிழந்தது மன வேதனை அளிப்பதாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

உலகின் மிக குட்டையான திருமண ஜோடி

image

உலகின் மிக குட்டையான திருமண ஜோடி என்ற கின்னஸ் உலக சாதனையை, பிரேசிலிய ஜோடி வென்றுள்ளனர். 31 வயதான பாலோவும் (90.28 செ.மீ.), 28 வயதான கட்யூசியாவும் (91.13 செ.மீ.) 2006ஆம் ஆண்டு சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாகி, பிறகு காதல் ஜோடியாக மாறினர். இதனைத் தொடர்ந்து, இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 7 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அந்த ஜோடி, தற்போது கின்னஸ் விருது பெற்றுள்ளது.

News June 13, 2024

நல்ல வாழ்க்கைத் துணையை தேடும் மம்தா மோகன்தாஸ்

image

திருமணம் செய்வதற்காக ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தான் தேடிக்கொண்டிருப்பதாக ‘மகாராஜா’ பட நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது, தான் ஒருவரை காதலித்ததாகக் கூறிய அவர், அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்றார். உறவு என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டுமே ஒழிய அன்பென்ற பெயரில் அழுத்தம் தருவதாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

News June 13, 2024

ஸ்மார்ட்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் மத்தியிலும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்ஃபோன் திரையை மணிக்கணக்கில் பார்ப்பதால், கண்கள் பலவீனமடைவதுடன், உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவது மனநலனிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.

News June 13, 2024

3 நாள்கள் தொடர் விடுமுறை

image

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி, வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு என 2 நாள்கள் விடுமுறை. அதைத் தொடர்ந்து திங்கள் கிழமை, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சனி, ஞாயிறு, திங்கள் எனத் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை வருவதால் சுற்றுலா, ஆன்மிகப் பயணம் செல்வோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.

News June 13, 2024

பாமகவுக்கு சம்மதம் தெரிவித்த பாஜக?

image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பாமகவுக்கு கூட்டணிக் கட்சியான பாஜக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாமக போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அன்புமணி கூறியிருந்தார். விக்கிரவாண்டியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடும் நிலையில், வேட்பாளரை இறுதிசெய்யும் பணியில் அதிமுக இறங்கியுள்ளது.

News June 13, 2024

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்: உயிரிழப்பு

image

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த தேவ்கி நந்த் ஷர்மா (66) உயிரிழந்தார். ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக கூறி, அவரது வீட்டின் அருகே இருந்த கோயிலில் கடந்த பிப்.12ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!