News June 14, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஜூன்- 14 | வைகாசி- 32
▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30AM -10:30AM, 04.30PM-05.30PM
▶கெளரி நேரம்: 12:30 PM – 01:00 PM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:00 AM
▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶ திதி : அஷ்டமி

News June 14, 2024

ஜூன் 22இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

image

ஜிஎஸ்டி கவுன்சிலின் 53ஆவது கூட்டம் ஜூன் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது 4 விதமாக (4, 12, 18, 24) ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு அக்., 7இல் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது.

News June 14, 2024

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை: அமைச்சர் ரகுபதி

image

குளறுபடிகளுக்கு இடம் தரக்கூடிய நீட் தேர்வு வேண்டுமா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுவதாக விமர்சித்த அவர், முறைகேடு செய்வதற்காகவே ஒரு தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றார். நீட் தேர்வை விரும்பும் மாநிலங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளட்டும், நமக்கு நீட் தேர்வு தேவையில்லை எனக் கூறினார்.

News June 14, 2024

ஆப்பிள் பழங்களில் ஸ்டிக்கர் ஏன் ஒட்டுகிறார்கள் தெரியுமா?

image

ஆப்பிள்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எவ்வாறு விளைந்தது போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். சில பழங்களில் 5 இலக்க எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதாவது, 84131, 86532 என 8ல் தொடங்கும் இந்த பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை. இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. இது பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பழங்களை விட, சற்று விலை அதிகமாக இருக்கும். இதில் நன்மை, தீமை என இரண்டும் இருக்கும்.

News June 14, 2024

யார் இந்த அஜித் தோவல்?

image

1968ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், இந்திய உளவுத்துறையிலும், `ரா’-விலும் பணியாற்றியவர். மிசோராமில் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்டவர். 1980களில் உளவாளியாக மிசோராம் தேசிய ஏஜென்சிக்குள் ஊடுருவி, அந்த இயக்கத்தைக் கூண்டோடு காலி செய்தார். தற்போது 3ஆவது முறையாக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News June 14, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ ஒருவனை அகந்தை ஆட்கொண்டால், அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும். ➤ மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட, ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல். ➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான். ➤ வாழ்வில் பொய் கூட உரைக்கலாம், உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே. ➤துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை!

News June 14, 2024

கோலியை குறைத்து மதிப்பிட வேண்டாம்: வாசிம் ஜாஃபர்

image

கோலி தனது மகத்துவமான ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். கோலி எப்போதும் போல ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கோலி 3ஆம் இடத்தில் பேட்டிங் செய்வதில் தனக்கு பெரிய விருப்பமில்லை என்றார். WC அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் கோலி இடம்பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலி நடப்பு டி20 WC பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

News June 14, 2024

ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

image

பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரின் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

News June 14, 2024

ஜூன் 14: வரலாற்றில் இன்று

image

➤ 1216 – பிரான்ஸ் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினார்.
➤ 1907 – நார்வே நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
➤ 1926 – உலக நாடுகள் அமைப்பில் இருந்து பிரேசில் விலகியது.
➤ 1940 – இரண்டாம் உலகப் போரில் பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.
➤ 1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

News June 14, 2024

T20 WC: இங்கிலாந்து அபார வெற்றி

image

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய ஓமன் அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 47 ரன்களில் சுருண்டது. இந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 4 லீக் போட்டியிலும் ஓமன் அணி தோல்வி அடைந்துள்ளது.

error: Content is protected !!