India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜி7 அமைப்பானது அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளைக் கொண்டது. இந்த 7 நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், அரசியல் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க ஜி7 அமைப்பு செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் 1973இல் இந்த அமைப்புக்கான முன்னெடுப்பு எடுக்கப்பட்டபோது, அமெரிக்கா, பிரிட்டன், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளே இடம்பெற்றிருந்தன.

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, உ.பி.யின் அரசியல் முக்கியத்துவம் கருதி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனும் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி போட்டியிட்டால், அது அவரின் முதல் தேர்தலாக அமையும்.

டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணியை இங்கிலாந்து 3.1 ஓவர்களில் சுருட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, 13.2 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, வெறும் 19 பந்துகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால், மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் கனவு பறிபோனது. அதேபோல், தேனியில் ஓபிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரனும் தோற்றதால் அங்கும் அவரது செல்வாக்கு குறைந்து விட்டது. இதனால் அதிமுக மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்தக்கட்ட முடிவை தீர்மானிக்கவே இபிஎஸ் தரப்புக்கு அவர் அழைப்பு விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் மோதும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்களையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அதிமுகவை காப்பாற்றும்படி ஓபிஎஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வியை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுகவை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம், கட்சி ஒன்றுபட்டால் தனது பிடி போய் விடுமோ என யாரும் சிந்திக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக கம்பீரமாக போட்டியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கி அதிகாரிகளின் விவரங்களை தரக்கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. பண மோசடி வழக்கில், சரியாக ஓராண்டுக்கு முன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் வங்கி அதிகாரிகளாக இருந்தவர்களின் பட்டியலைக் கேட்டு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப் படையின் விமானம் குவைத் சென்றது. இந்த நிலையில் 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்கள், இன்று காலை 9.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் 31 பேரின் உடல்கள் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டியின் 30ஆவது லீக் ஆட்டத்தில், அமெரிக்காவும், அயர்லாந்தும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வென்றால் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். ஆனால் அயர்லாந்து அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு செல்ல முடியும். அதேபோல், ரன் ரேட் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இன்றைய போட்டியை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசு வேலைக்கு பணம் வாங்கியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வரும் நிலையில், ஜாமின் கிடைக்காமல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தே அமைச்சர் பதவியினையும் வகித்துவந்த அவர், பலரின் எதிர்ப்புகளுக்குப் பின் ராஜினாமா செய்தார். இருப்பினும், அவரது சட்டப் போராட்டம் தொடர்கிறது.
Sorry, no posts matched your criteria.