India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 12:30 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது என ட்வீட் செய்துள்ள தனுஷ் “ஒரு காவிய பயணம் தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். இது இளையராஜா படத்திற்கான அறிவிப்பு என்றே தெரிகிறது. மேலும், இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக 7+1 தொகுதி பங்கீட்டை நிறைவும் செய்தது. ஆனால், ஒரே இரவில் முடிவை மாற்றிய பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. இந்நிலையில், திடீரென கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 திட்டத்திற்காக மதிப்புமிக்க ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருதை இஸ்ரோ பெற்றுள்ளது. இந்த விருதை இஸ்ரோ சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் பெற்றுக்கொண்டார். விண்வெளித் துறையில் நிகழ்த்தப்படும் அசாதாரண சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் இருந்து ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த சீதா, தனது கணவரின் மறைவை தொடர்ந்து கட்சியில் இருந்து தானும், குடும்பத்தாரும் ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஹசரங்காவுக்கு ஐசிசி 2 போட்டிகளில் விளையாட தடை விதித்தது. அடுத்து அவர் எப்போது விளையாடினாலும், அதில் 2 போட்டிகளில் தடை விதிக்கப்படும். அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள நிலையில், அந்த நேரத்தில் அவர் அணியில் இல்லாமல் போனால் அணிக்கு பின்னடைவாக இருக்கும். எனவே, அதற்கு முன்பாக ஒரு டெஸ்ட் தொடரில் அவரை விளையாட வைக்க அணி பிளான் செய்துள்ளது.
தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணியருக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ரூ.6,000, 9ஆவது மாதத்தில் ரூ.2,000 என ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படும். மேலும் 3, 6ஆவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், பைக்கில் உலகம் சுற்றிவரும் தனது பயணத்தை அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். அஜித் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.