News June 15, 2024

T20 WC: தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்

image

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேபாள அணி 2 போட்டிகளில் விளையாடி 1 தோல்வி, 1 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

News June 15, 2024

தாமரை தமிழகத்தில் மலராது: திருமாவளவன்

image

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியவர்களை காணவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மழைக்கால தவளை போல் கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே சென்றார்? என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட இயக்க பூமியில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்றார். திமுக அரசின் நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த மதிப்பெண்ணே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.

News June 15, 2024

நிலத்தை ஆக்கிரமித்ததாக யூசுப் பதானுக்கு நோட்டீஸ்

image

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக யூசுப் பதானுக்கு எதிராக குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலத்தை கடந்த 2012ஆம் ஆண்டு யூசுப் பதானுக்கு விற்பதற்கான வதோதரா மாநகராட்சி முன்மொழிவை, மாநில அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

News June 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஜூன்- 15 | ஆனி – 01
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 04.30 PM – 05.30 PM
▶கெளரி நேரம்: 10:30 PM – 11:30 PM, 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி : சூன்யம்

News June 15, 2024

இமாச்சலில் வரலாறு காணாத வெப்பம் பதிவு

image

நாட்டின் குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை என மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல தலைநகர் சிம்லாவில் 87.8 டிகிரி வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

News June 15, 2024

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா

image

கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News June 15, 2024

ஜீரண சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய்

image

உணவு செரிமான பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் நெல்லிக்காய் சிறந்த தீர்வு. ஜீரணக்கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியை கலந்து ஒரு கிளாஸ் குடித்தால் உடனே பலன் கிடைக்கும். உடலுக்கு ஆற்றல் ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

News June 15, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றிக்கான வழி.
➤ உபதேசம் செய்வதை விட, ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
➤ தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது.
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும்

News June 15, 2024

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது

image

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை மறுத்திருந்தது. இந்நிலையில், தேர்வில் முறைகேடு செய்ய உதவியதாக 5 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

News June 15, 2024

அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்: ஈவிகேஎஸ்

image

விக்கிரவாண்டி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்ற அவர், பாஜகவின் மதவாத அரசியல் தமிழகத்தில் எப்போதும் எடுபடாது என்றார். தமிழிசையை பொது இடத்தில் அமித் ஷா அவமதித்ததை ஏற்க முடியாது, இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!