India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் உள்ளிட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல்
விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற அமெரிக்கா மற்றும் அயர்லாந்து இடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இதனால் 1 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற US அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. இதையடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருந்த பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து நடப்பு உலக கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறின.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அபார வெற்றிபெற்றார். இதையடுத்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், அதன்பின் தரிசனத்திற்காக கோவை ஈஷா மையத்திற்கு வருகை தந்தார். அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஆதி யோகியை வழிபட்ட அவர், நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சி பிரிவில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. உகாண்டா அணி 1 வெற்றி , 2 தோல்விகளுடன் அந்த அணியும் வெளியேறியுள்ளது. சி பிரிவில் ஆப்கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் நேற்றுடன் நிறைவடைந்தது. 2 மாதங்கள் இடைவெளி இருந்ததால் அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மீன்களின் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் நேபாளத்துக்கு 116 ரன்களை தென்னாப்பிரிக்கா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற நேபாள் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் அதிரடியாக 43 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை தென்னாப்பிரிக்க அணி குவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ளது ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம். கயிலை மலைக்குச் சென்று வழிபட்ட சித்தர்கள் கடம்பூர் கோயில், கயிலைக்கு நிகரானது எனக் கருதி இங்கு வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயத்தின் சிறப்பே பிரதோஷ மூர்த்திதான். இங்குள்ள அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருபவர் என்பதால் இங்கு சஷ்டிய பூர்த்தி, சதாபிஷேகம் செய்தால் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவு துறை வெளியிடுகிறது. சிலர், ரேஷன் பொருட்களின் மதிப்பு தெரியாமல், கடை ஊழியர்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறுவதால் தான், பல முறைகேடு நடக்கிறது. இதனால், பொருட்களை விற்கும் போது ரசீதில், பொருட்களின் தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து எதுவும் தெரியாது மத்திய இணை அமைச்சர் ஷோபா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி செய்தியை பார்த்துதான் வழக்கு பற்றி தெரிந்து கொண்டதாக கூறிய அவர், இந்த வழக்கில் மாநில அரசின் பங்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிடிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் நேற்று அதற்கு தடை விதித்தது.

➤ திமுக அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது: அண்ணாமலை
➤ பாஜக படம் தமிழகத்தில் ஓடாது: சேகர்பாபு
➤ மக்களுக்காக பாஜக ஆட்சி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
➤ இந்தியாவின் மதிப்பு உலகளவில் உயர்ந்துள்ளது: ஜே.பி.நட்டா
➤ மா.பொ.சி படத்தின் பெயர் மாற்றம்
➤ அமெரிக்கா-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து
Sorry, no posts matched your criteria.